16 வயதினிலே படத்தில் டாக்டரை பற்றி பலரும் அறியாத தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் இயக்கத்தின் இமயமாக இருந்தவர் பாரதிராஜா. இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. அந்த வகையில்
பாரதிராஜா இயக்கத்தில் முதன் முதலில் வெளிவந்த படம் 16 வயதினிலே.
இந்தப் படத்தில் ரஜினி, கமல், ஸ்ரீதேவி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் ரஜினி பரட்டை என்ற கதாபாத்திரத்திலும், கமல் சப்பானி என்ற கதாபாத்திரத்திலும், ஸ்ரீதேவி மயில் என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள். படத்தில் மயில் ஆசிரியராகவும், நல்ல படித்தவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
16 வயதினிலே படம்:
சப்பானி மயிலை விரும்புகிறார். வில்லனாக பரட்டை ரஜினி நடித்திருக்கிறார். மயிலை அடைய வேண்டும் என்று பரட்டை நினைக்கிறார். எப்படியோ சப்பாணி, பரட்டையை கொன்று மயிலை காப்பாற்றி விடுகிறார். இறுதியில் சப்பாணியை போலீஸ் கைது செய்து செல்கிறது. அப்போது ரயில்வே ஸ்டேஷனில் மயில், சப்பானி வரும் வரை வாழ்நாள் முழுவதும் காத்திருப்பேன் என்று கூறுகிறார். இதுவே படத்தின் மீதி கதை.
16 வயதினிலே சத்யஜித்:
மேலும், இந்த படத்தில் ரஜினி, கமலின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றிருந்தது. முதல் படத்திலே பாரதிராஜா மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார் என்று சொல்லலாம். அது மட்டும் இல்லாமல் ஒவ்வொரு நடிகர்களும் இந்த படத்தில் நடித்தார்கள் என்பதைவிட வாழ்ந்து இருந்தார்கள் என்றே சொல்லலாம். அந்த வகையில் இந்த படத்தில் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் சத்யஜித்.
சத்யஜித் குறித்த தகவல்:
இவர் கர்நாடகாவை சேர்ந்தவர். இவர் திரைப்படக் கல்லூரியில் தங்கப் பதக்கமும் வென்றிருக்கிறார். இவரைப் பற்றி செய்தித்தாளில் பாரதிராஜா பார்த்திருக்கிறார். அதற்கு பிறகு தான் இவர் 16 வயதினிலே படத்தில் டாக்டர் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இந்த படத்தில் இவர் பேசும் ஆங்கிலம் பார்வையாளர்கள் மத்தியில் பிரமிக்க வைத்ததென்றே சொல்லலாம். அந்த அளவிற்கு சிறப்பாக நடித்திருப்பார். இன்னும் 16 வயதினிலே டாக்டரை யாராலும் மறக்க முடியாது என்று சொல்லலாம்.
சத்யஜித் தற்போதைய நிலை:
மேலும், இந்த படத்திற்கு பிறகு இவர் தமிழ் சினிமா உலகில் ஒரு கலக்கு கலக்குவார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், இந்த படத்திற்கு பிறகு இவருக்கு சரியாக பட வாய்ப்புகள் அமையவில்லை. பிறகு இவர் சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். கடைசியாக இவர் 2022 ஆம் ஆண்டு ஒரு கன்னட படத்தை இயக்குவதாக பேட்டி அளித்திருந்தார். அதற்குப்பின் இவரை குறித்து தகவல்கள் எதுவும் பெரிதாக வெளியாகவில்லை.