காற்றுக்கென்ன வேலி சீரியலின் டிஆர்பி ரேட்டிங்காக ஒளிபரப்பும் காட்சிகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மக்கள் மத்தியில் பிரபலமாகி வரும் தொடர்களில் ஒன்று தான் காற்றுக்கென்ன வேலி சீரியல். இந்த சீரியல் கடந்த 2021 ஆம் ஆண்டு தான் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது.
தற்போது இந்த தொடர் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் தொடர் ஆக மாறி இருக்கிறது. இந்த தொடரில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் பிரியங்கா நடித்து வருகின்றார். ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்ற கனவோடு இருக்கும் வெண்ணிலாவுக்கு அவருடைய அப்பா கல்யாண ஏற்பாடு செய்கிறார். ஆனால், வெண்ணிலா கல்யாண நாளன்று வீட்டை விட்டு வெளியேறி தன் கனவை நனவாக்க போராடுகிறார். பின் வெண்ணிலாவுக்கு பல்வேறு வகையில் பிரச்சனைகள் வருகிறது.
காற்றுக்கென்ன வேலி சீரியல்:
இருந்தும் ஹீரோ சூர்யா தான் வெண்ணிலாவுக்கு உறு துணையாக நிற்கிறார். பின் இருவருக்கும் காதல் மலர்கிறது. பல போராட்டங்களுக்கு பிறகு இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்ய இருக்கிறார்கள். ஆனால், சூர்யா பெரியம்மா செய்த சதியால் இவர்கள் திருமணம் நின்று விடுகிறது. தற்போது சீரியலில் சூர்யா- வெண்ணிலா இடையில் மோதல் நடந்து கொண்டிருக்கின்றது. இதனால் சூர்யாவை வேணாம் என்று வெண்ணிலா முடிவெடுத்து விட்டார்.
சீரியலின் கதை:
இருந்தாலும், சூர்யாவை மறக்க முடியாமல் வெண்ணிலா தவித்துக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் சூர்யாவிற்கு திருமண ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் சூர்யா வெண்ணிலாவிற்கே தெரியாமல் அவருடைய கழுத்தில் தாலி கட்டி விட்டார். இது சூர்யாவின் பெற்றோர்களுக்கு மட்டும் தெரியும். பின் இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று வெண்ணிலா மறுக்கிறார். இருந்தாலும் சூர்யா விடாமல் வெண்ணிலாவிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தி வருகிறார்.
சீரியலில் வரும் ஆபாச காட்சிகள்:
இந்த நிலையில் காற்றுக்கென்ன வேலி சீரியலை நெட்டிசன்கள் கலாய்த்து வரும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, சீரியலில் சூர்யா தனக்கு திருமணம் ஆனது என்பதால் வெண்ணிலாவின் வீட்டில் அவருடைய அம்மா அப்பாவிற்கு தெரியாமல் ஒளிந்து கொண்டு முதலிரவிற்கு தயார் செய்கிறார். இதனால் வெண்ணிலா கோபப்படுகிறார். இருந்தாலும், சூர்யா ரொமான்ஸ் செய்கிறார். பின் இருவருமே ஒரே பாத்ரூமில் குளிப்பது போன்ற காட்சியும் வெளியாகி இருக்கிறது.
சீரியலை கலாய்க்கும் ரசிகர்கள்:
இதை பார்த்து தான் நெட்டிசன்கள் கடுப்பாகி இருக்கிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கும் இந்த சீரியலில் தேவையில்லாமல் ஆபாச காட்சிகள் வைப்பதா? சீரியல் என்பதால் இப்படி எல்லாம் தவறான காட்சிகளை ஒளிபரப்புவதன் மூலம் தவறான பாதைக்கு கொண்டு செல்லும். இதனால் இந்த சீரியலை தடை செய்ய வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், இன்னும் சிலர், சீரியல் கதை காட்சிகளுக்கு போய் இப்படி எல்லாம் பேசுவதா? இந்த சீரியலில் மட்டும் தான் இப்படி இருக்கிறதா? தமிழில் வேற எந்த சீரியலும் இது மாதிரி காட்சிகள் நடந்தது இல்லையா? என்று ஆதரவு தெரிவித்தும் வருகிறார்கள்.