நடிகை இந்திரஜாவின் சுதந்திர தின பதிவு தான் தற்போது இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் இன்று சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறார்கள். நம்முடைய இந்தியாவிற்கு 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி தான் சுதந்திரம் கிடைத்தது. இதனால் ஒவ்வொரு வருடமும் இந்த நாளை இந்தியா முழுவதுமே கோலாகலமாக கொண்டாடி வருகிறோம். இது 78 ஆவது சுதந்திர தினம்.
பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் என பல இடங்களில் தேசியக் கொடிகளை ஏற்றி, மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கி வருகிறார்கள். மேலும், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், சாதாரண மக்கள் என அனைவருமே இந்த நாளை கொண்டாடி சோசியல் மீடியாவில் பதிவு போட்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகை இந்திரஜா போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.
இந்திரஜா பதிவு:
அதாவது, நடிகை இந்திரஜா அவர்கள் தாமரையின் மேல் தேசியக்கொடி கலரில் ஆடை அணிந்து, முகத்தில் புலி வர்ணம் போட்டு, தலைக்கு மேல் மயில் தோகை விரித்து, கையில் கொடியை ஏந்தி இருப்பது போல் போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார். தற்போது இந்த புகைப்படத்தை இவர் இணையத்தில் பதிவிட்டு குடியரசு தின வாழ்த்துக்கள் என்று கூறி இருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும், இன்று சுதந்திர தினம். அது கூட தெரியாமல் குடியரசு தின விழா என்று போட்டிருக்கிறார்
நெட்டிசன்கள் கிண்டல்:
எதற்கு இந்த வீண் விளம்பரம் என்று பங்கமாக கலாய்த்து கேலி கிண்டலும் செய்து இருக்கிறார்கள். ஆனால், இது இந்திரஜா போடல, மேக்கப் ஆர்ட்டிஸ்ட் இவரது இன்ஸ்டா பக்கத்தில் Collab செய்து இருக்கிறார். அதில் குறிப்பிடப்பட்டுள்ள குடியரசு வாழ்த்தை கவனிக்காமல் இந்திரஜாவும் அப்படியே இந்த பதிவை விட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் ரோபோ ஷங்கர்.
இந்திரஜா திரைப்பயணம்:
இவரின் மகள் தான் இந்திரஜா. இவர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘பிகில்’ படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். முதல் படத்திலேயே இவருடைய நடிப்பை பார்த்து பிரபலங்கள் பலருமே பாராட்டி இருந்தார்கள். அதற்குப் பின் இவர் ஜீ தமிழில் அர்ஜுன் தொகுத்து வழங்கியிருந்த சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து இருந்தார். ஆனால், இவரால் இறுதிவரை தாக்குப் பிடிக்க முடியவில்லை. அதனை தொடர்ந்து இவர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த ‘விருமன்’ படத்தில் நடித்திருந்தார்.
இந்திரஜா கர்ப்பம்:
தற்போது இவர் சில படங்களில் கமிட்டாகி நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த சில மாதத்துக்கு முன் இவருக்கும் கார்த்திக் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்திரஜா- கார்த்திக் திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து இருந்தார்கள். திருமணத்திற்கு பின் இந்திரஜா- கார்த்திக் இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலக்கி இருந்தார்கள். தற்போது இந்திரஜா கர்ப்பமாக இருக்கிறார்.