சமீபத்தில் தான் போன் செய்து நல்ல இருக்கீங்களானு கேட்டேன் அதற்குள் – வாணியின் மறைவினால் நொந்து போன செய்தி வாசிப்பாளர் ரத்னா.

0
802
vani jairam
- Advertisement -

தமிழ் சினிமாவில் மூத்த மற்றும் முன்னணி பாடகியான வாணி தமிழ், தெலுங்கு, ஹிந்தி. மலையாளம், கன்னடம் என 19 மொழிகளில் வாணி ஜெயராம் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். இவர் தமிழில் முள்ளும் மலரும் அபூர்வ ராகங்கள் புன்னகை மன்னன் உள்ளிட்ட பல படங்கள் பல பாடல்களையும் பாடியுள்ளார். மேலும் இவர் கடந்த அரை நூற்றாண்டாக 10000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இந்நிலையில் தான் கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி அவரது வீட்டில் நெற்றியில் காயங்களுடன் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இவரில் மறைவுக்கு பல பிரபலங்கள் இரங்கல் கூறி வரும் நிலையில் பிரபல செய்தி வாசிப்பாளரான ரத்னா தன்னுடைய முகப்பு பக்கத்தில் உருகி ஒரு பதிவை இட்டுள்ளார்.

-விளம்பரம்-

அந்த பதிவில் ” என் தாய்க்கு நிகராக நான் நேசிக்கும் வாணி அம்மாவை இழந்து விட்டேன்…என் உயிரின் ஒரு பாகத்தை யாரோ வெட்டி எடுத்தாற் போன்ற அடக்க முடியாத வலி. சுமார் பத்து வருடங்களுக்கு முன் Dr.கமலா வீட்டு கொலுவில் வாணி அம்மாவை முதன்முதலில் சந்தித்தேன்..’ ரத்னா thematic கொலு வீடு முழுக்க வைப்பாள்.நேரம் கிடைத்தால் சென்று பாருங்கள் ‘ வாணி அம்மாவிடம் சொன்னார் Dr.கமலா.

- Advertisement -

அம்மாவும் என் நம்பரை வாங்கிக் கொண்டார்கள். ஏதோ மரியாதை கருதி வாங்கிக் கொண்டார்கள் என்று நினைத்த எனக்கு அடுத்த நாள் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. வாணி அம்மா cell phoneஇல் அழைத்தார்கள். நானும் ஜெயராம்ஜியும் நாளை கொலு பார்க்க வரலாமா என்று கேட்டார்கள். அந்த நொடியை வார்த்தைகளால் விளக்க முடியாது. என்னை நானே கிள்ளி பார்த்து கனவல்ல என்று உறுதி செய்துக் கொண்டேன்.

பாட்டு பாடி எனக்கு பதிலளித்தார் :

அன்று தொடங்கிய எங்கள் உறவு ஒரு இசைக்கலைஞருக்கும் ரசிகைக்கும் உள்ள உறவின் எல்லைகளைத் தாண்டி அம்மாவிற்கும் மகளுக்குமான ஒரு வித personalized ஆத்மார்த்த உறவாக மாறியது. அது என் பாக்கியம். ‘நீங்கள் உலகமே போற்றும் இசையரசி. நான் எந்த திறமையும் இல்லாத ஒரு சாதாரண பெண். என்னிடம் ஏன் இவ்வளவு அன்பை பொழிகிறீர்கள்’ என்று ஒரு முறை தைரியமாக வாய்விட்டு கேட்டுவிட்டேன். நீ எது நான் எது. ஏன் இந்த சொந்தம். பூர்வ ஜென்ம பந்தம். தன் பாடலையே அம்மா பதிலாக பாடி என்னை கட்டி அணைத்து முத்தமிட்டார்கள்.

-விளம்பரம்-

வீட்டை அழகாக வைத்திருப்பர் :

அவருக்கும் தேசாய் முகம் பிடிக்கும் அவர் வீட்டிற்கு வருகிறார் என்றால் நான் அவரிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என கேட்பேன் அவர் மசால் தொடர் பண்ணு, ஐ லவ் இட்லி என்று குழந்தை போல சொல்வார்கள், என்னோடு பழகிய பிறகு என்னுடைய செய்தி வாசிப்பாளர் வேலையை பற்றி கேட்பார்கள் வர்களுக்கு பதிலளிப்பது மிகவும் சுவாரசியமாக இருக்கும். அவர் சேலை உடுத்துவதில் இருந்து வீட்டை அழகாக வைத்திருப்பது வரையில் மியூஸியம் போன்று அவர் வைத்திருப்பர்.

கடைசி உரையாடல் :

சமீபத்தில் தான் அவருக்கு போன் செய்து பணியாளர் வந்தாங்களா? எல்லா வேலைகளுக்கு சரியாக முடிந்ததா? ஜாக்கிரதையாக இருங்கள் என்று சொன்னேன். அவர் நான் பத்திரகமாத்தான் இருக்கிறேன் கவலை படாதே என்று சிரித்துக்கொண்டே சொன்னார். இப்படி எல்லாவற்றிலும் பக்குவமாக இருக்கும் வாணி அவர்களின் நினைவுகளை கூறும் ரத்னாவுக்கு வாணியின் இறப்பு அவரது குடும்பத்தில் ஒருவரை இழந்த துக்கத்தை அவருக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement