நள்ளிரவில் மடக்கிய 25 வயது இளைஞன் – 90ஸ் கிட்ஸ் பிரபல செய்தி வாசிப்பாளர் ரத்னா ஷேரிங்.

0
1504
Ratna
- Advertisement -

செய்தி வாசிப்பாளர் ரத்னாவை நள்ளிரவில் மடக்கி இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொள்ள கேட்டிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் செய்தி வாசிப்பாளர்களில் மிகவும் பிரபலமான நபராக இருப்பவர் ரத்னா. இவர் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் செய்தி வாசிப்பாளர் என்று சொல்லலாம். இவர் மீடியாவில் நுழைந்து 28 ஆண்டுகள் முடிவடைந்து இருக்கிறது. 

-விளம்பரம்-

இவர் பல தமிழ் சேனலில் செய்தி வாசித்து இருக்கிறார். இருந்தாலும், இவர் சன் டிவியில் செய்தி வாசிப்பதன் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், இவர் 18 வருடங்களாக திரைவிமர்சனங்களை செய்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் படங்களிலும் செய்தி வாசிப்பாளராக நடித்திருக்கிறார். தற்போதும் இவர் செய்தி வாசிப்பாளர் பணியை விடாமல் செய்து கொண்டு வருகிறார்.

- Advertisement -

அதுமட்டுமில்லாமல் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார். மேலும், இவர் மீடியாவில் பயணித்து வந்தாலும் இவர் தனியாக சொந்தமாக பிசினஸ் செய்து வருகிறார். இப்படி ரத்னா அவர்கள் பிஸியாக இருந்தாலும் சோசியல் மீடியாவிலும் ஆக்டிவா இருக்கிறார். சமீப காலமாக இன்ஸ்டாகிராம், பேஸ்புக் என்ற எல்லா சமூக வலைத்தளங்களிலும் இவர் வீடியோ, புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தன் வாழ்வில் நடந்த ஒரு சுவாரசியமான விஷயத்தை facebook பக்கத்தில் ரத்னா பகிர்ந்திருக்கிறார். அதில் அவர், 1995ஆம் ஆண்டு. அப்போது எனக்கு மீடியாவில் பெரிய அளவிற்கு பிரபலம் இல்லை என்றாலும் ஓரளவுக்கு என்னை மக்கள் அறிமுகம் செய்தார்கள். பின் ஒரு நாள் ஷூட்டிங் முடித்துவிட்டு நான் ஸ்டுடியோவில் புகைப்படம் எடுத்துக் கொண்டு வள்ளுவர் கோட்டம் வழியாக ஸ்கூட்டியில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தேன்.

-விளம்பரம்-

அப்போது 25 வயது கொண்ட இளைஞர் ஒருவன் என்னை சிக்னலில் வழிமறித்தான். பின் அவர், நீங்கள் சன் டிவி ரத்னா தானே என்றார். நானும் ஆமாம் என்றேன். பின் அவர், உங்களை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன். உங்களுடைய பதில் என்ன? என்று கேட்டார். அவன் அப்படி சொன்னவுடன் எனக்கு வெலவெலத்து போய்விட்டது. உடனே நான் வாய்ப்பில்லை. எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது என்று சொன்னேன்.

அப்போது அவன் ஏமாற்றம் அடைந்தான் என்பது அவன் முகத்தில் நன்றாக தெரிந்தது. உடனே அவன் உங்களுக்கு தங்கச்சி இருந்தால் சொல்லுங்க கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று சொன்னார். அடுத்த நொடியே நான் வண்டியை எடுத்துக் கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டேன். இந்த போட்டோவை பார்க்கும் போது எனக்கு அந்தப் பையனின் ஞாபகம் தான் வருகிறது என்று தன்னுடைய இளம் வயது புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement