தமன்னாவின் காவாலா பாடல் குறித்து மோகன் ஜி கூறியிருக்கும் அறிவுரை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் அவர்கள் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார்.
இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இருந்தாலும், இந்த படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை அடுத்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ருத்ரதாண்டவம். இந்த படமும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மையமாக கொண்ட கதை. இந்தப் படத்தை குறித்தும் சோசியல் மீடியாவில் சில சர்ச்சைகள் எழுந்து இருந்தது.
மோகன் ஜி திரைப்பயணம்:
இப்படி இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி இருந்தாலும் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து மோகன் ஜி, செல்வராகவனை வைத்து பகாசூரன் படத்தை இயக்கி இருந்தார். மோகன் ஜியின் முந்தைய திரைப்படம் போல இந்த திரைப்படமும் சமூக அக்கறை போல ஒரு படமாகவே எடுக்க முயற்சி செய்து இருந்தார் மோகன். மேலும், இந்த படத்தின் சமூக வலைதளத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனை, பாலியல் தொழிலில் பெண்கள் எப்படி சிக்குகின்றனர் போன்ற விஷயங்களை பேசி இருந்தார் மோகன்.
மோகன் இயக்கும் படம்:
இந்த படமும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. இதனை தொடர்ந்து மோகன் மீண்டும் ரிச்சர்டை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் மோகன் ஜி கலந்து கொண்டிருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியது, தற்போது சோசியல் மீடியாவில் தமன்னாவின் காவாலா பாடல் தான் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
தமன்னாவின் காவாலா பாடல்:
அதுமட்டுமில்லாமல் அந்த பாடலில் தமன்னாவின் முகத்திற்கு பதிலாக சிம்ரன் முகத்தை வைத்து எல்லாம் வெளியிட்டு இருந்தார்கள். அந்தப் பாடலை முதலில் பார்ப்பவர்கள் இது சிம்ரன் மேடம் தான் டான்ஸ் ஆடுகிறார்கள் என்று நினைத்துக் கொள்வார்கள். அந்த அளவிற்கு நம்பும் படியாக அந்த பாடல் இருக்கிறது. ஆனால், அதில் உண்மையாக நடனம் ஆடுவது தமன்னா தான். அந்த அளவிற்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள்.
மோகன் ஜி அறிவுரை:
இதே மாதிரி உங்களுடைய போட்டோவையும் ஈசியாக ஸ்கிரீன்ஷாட் எடுத்து அதனை தப்பான வீடியோவில் பயன்படுத்தினால் என்ன செய்வீர்கள்? எங்க போய் புகார் கொடுப்பீர்கள்? எத்தனை புகாரை தான் காவல்துறை எடுத்து சரி பண்ணும்? அதனால் ஃபேமிலியாக இருக்கும் போட்டோவை டிபியில் வையுங்கள் என்று அறிவுரை கூறியிருக்கிறார்.