இணையத்தில் பரவிய NGK படக்காட்சி..!கெஞ்சிய தயாரிப்பாளர்…!

0
752
ngk

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தின் நடிகர் சூர்யா “என்ஜிகே “என்ற படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 36வது படமான இந்த படத்தில் நடிகைகள் சாய் பல்லவி, ராகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடிக்கின்றனர். கடந்த ஆண்டு 2017 ஆம் ஆண்டு இந்த இந்த படத்தின் ஆரம்ப தகவல்கள் வெளியாகின.

இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், ட்ரீம் வாரிர்ஸ் பிக்சர் இந்த படத்தை தயாரித்துள்ளது. நீண்ட நாட்களாக மந்தமாக இருந்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மும்மரமாக நடந்து வருகிறது.

- Advertisement -

சூர்யா ரசிகர்களும் படத்தின் புகைப்படங்கள் மற்றும் டிரெய்லரை எதிர்பார்த்து காத்து இருந்தனர். தற்போது படப்பிடிப்புகள் கேரளா மாநிலம் கொச்சினில் நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு காட்சிகளை யாரோ திருட்டுத்தனமாக படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விட்டனர். இது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியாகி உள்ளனர். 

இதனைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘ரசிகர்கள் அனைவரும் சூர்யாவின் என்.ஜி.கே படம் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள ஆர்வமாக இருப்பது புரிகிறது. அவற்றை வெளியிட தயார் செய்து கொண்டு இருக்கிறோம். படம் வெளியாவது வரை உங்கள் ஆர்வத்தை கட்டுப்படுத்துங்கள், பட காட்சிகளை கசிய விடாதீர்கள்’’ என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement