பேரறிவாளன் விடுதலை – ஏற்ற அண்ணாமலை, எதிர்க்கும் காயத்ரி ரகுராம் (ஒரே கட்சியிலேயே இப்படி ஒரு குழப்பமா)

0
641
Perarivalan
- Advertisement -

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்தவர் பேரறிவாளன். இவருக்கு முதலில் தூக்கு தண்டனை கொடுக்கப்பட்ட நிலையில் 2014 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு இருந்தது. பல போராட்டங்களுக்கு பிறகு 31 ஆண்டுகள் கழித்து பேரறிவாளன் விடுதலையாகி இருக்கிறார். மேலும், அண்மையில் தான் பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவிட்டு இருந்தது. இந்த தீர்ப்பை கேட்டதும் பேரறிவாளன் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்து இருந்தனர்.

-விளம்பரம்-

அதோடு இந்த தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்று இருக்கின்றனர். ஜோலார்பேட்டையில் உள்ள தன்னுடைய வீட்டில் அனைவருக்கும் இனிப்பு வழங்கி தன் விடுதலையை கொண்டாடி இருக்கிறார் பேரறிவாளன். மேலும், பேரறிவாளன் விடுதலைக்கு குரல் கொடுத்த அனைவருக்கும் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்திருக்கிறார். 31 ஆண்டுகாலம் தன் மகனின் விடுதலைக்காக போராடி இருந்தவர் பேரறிவாளன் தாய் அற்புதம் அம்மாள். இது தொடர்பாக விடுதலைக்கு பின் வெளியில் வந்த பேரறிவாளன் பேட்டியில் கூறியிருப்பது,

- Advertisement -

பேரறிவாளன் அளித்த பேட்டி:

நல்லவர்கள் வாழ வேண்டும் என்பது இயற்கையின் நியதி. எனது போராட்டம் தனிப்பட்ட போராட்டமல்ல. சிறை வாழ்க்கையின் போது தமிழர்கள் என் மீது மிகுந்த அன்பு செலுத்தி இருந்தார்கள். தங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாக நினைத்தார்கள். முப்பது ஆண்டுகாலம் என்னுடன் இருந்த அத்தனை தமிழர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய அம்மாவின் தியாகம் மற்றும் சட்டப் போராட்டம் மற்றும் என் குடும்பத்தினரின் கிடைத்த வெற்றி தான் இந்த தீர்ப்பு. என் அம்மா ஆரம்ப காலங்களில் அவமானங்கள், புறக்கணிப்புகளை சந்தித்து இருந்தார்.

தன் தாய் குறித்து பேரறிவாளன் சொன்னது:

இந்த வேதனைகளை கடந்த 31 ஆண்டுகள் இடைவிடாமல் போராடி இருந்தார்கள். என் தாய் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை எனக்காகவே அர்ப்பணித்து இருக்கிறார். மேலும், தங்கை செங்கொடியின் உயிர் தியாகம் அளப்பரியது. எனது விடுதலைக்காக பல்வேறு தரப்பினரும் உதவியிருக்கிறார்கள். என் விடுதலைக்காக போராடிய அனைவரையும் நேரம் கிடைக்கும் போது நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளேன் என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

அண்ணாமலை போட்ட ட்வீட் :

மேலும், பேரறிவாளன் விடுதலை அடுத்து பலரும் உற்சாகத்தில் கொண்டாடி இருக்கிறார்கள். பேரறிவாளன் விடுதலைக்கு பல அரசியல் தலைவர்கள் வரவேற்பை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் பேரறிவாளனில் விடுதலைக்கு ஆதரவே தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ‘பேரறிவாளனை உச்ச நீதிமன்றம், அரசியல் அமைப்புச் சட்டம் 142-ன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்திருக்கும் தீர்ப்பை தமிழ்நாடு பா ஜ க ஏற்றுக் கொள்கிறது.

காயத்ரி ரகுராம் கண்டனம் :

நம் ஒற்றுமையும், பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் சமரசம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என்றும் நம்புகின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.இப்படி ஒரு நிலையில் பா ஜ கவை சேர்ந்த காயத்ரி ரகுராம் பேரறிவாளனின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். பேரறிவாளனின் விடுதலை செய்தி வெளியான பிறகு அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் ஒரு டயலாக்- நான் இந்த டயலாக்கை தோராயமாக சொல்கிறேன் – “மிகவும் நல்ல சட்டம் உள்ளது, ஆனால் பல ஓட்டைகள் உள்ளன, சில குற்றவாளிகள் சட்டத்தின் ஓட்டைகளை மட்டுமே கற்றுக்கொண்டனர். அவர்கள் அதிலிருந்து வெளியே வருகிறார்கள் – எனக்கு இந்த டயலாக் பிடிக்கும் எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisement