நான் அவரை காதலிக்கிறேன். திருமணம் குறித்து பேசிய நடிகை நிக்கி கல்ராணி.

0
26584
nikki-galrani
- Advertisement -

‘டார்லிங்’ படம் நடிகை நிக்கி கல்ராணி அவர்கள் தனது காதலர் சென்னையில் இருப்பதாகவும், அவரை தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் ஒரு பேட்டியில் கூறி இருந்தார். மேலும், இது குறித்து ரசிகர்கள் அவர் யார்? யார்? என பல கேள்விகளை சமூக வலைத்தளங்களில் எழுதி வருகின்றனர். நடிகை நிக்கி கல்ராணி அவர்கள் கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். 1993-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி, மனோகர் கல்ரானி, ரேஷ்மா ஆகியோருக்கு மகளாக பிறந்தார். ஓர் காதல் செய்வீர் திரைப்படத்தில் நடித்த நடிகை சஞ்சனா கல்ரானி இவரது மூத்த சகோதரி ஆவார். இவர் பெங்களூரிலேயே பிறந்து, வளர்ந்து தன் படிப்பை முடித்தவர். இவர் முதன் முதலாக மலையாள மொழி படம் மூலம் தான் சினிமா துறைக்குள் அறிமுகமானார். அதுவும் 2014 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான ‘1983’ படத்தில் தான் அறிமுகமானார் நிக்கி கல்ராணி.

-விளம்பரம்-
Image result for Nikki Galrani"

- Advertisement -

மேலும், இவருடைய முதல் படத்திலேயே பெரிய அளவு மக்களிடையே பேசப்பட்டார். அதுமட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் படம் வெற்றி பெற்றது என்று சொல்லலாம். அதனை அடுத்து இவர் கன்னட மொழியில் நடிக்க தொடங்கினார். மேலும்,அடுத்து அடுத்து இவருக்கு சினிமா துறையில் பல பட வாய்ப்புகள் வந்தது. இதனை தொடர்ந்து நிக்கி கல்ராணி அவர்கள் பிஸியாக இருந்தார் என்று சொல்லலாம். இதனை தொடர்ந்து தமிழ் சினிமா உலகம் மட்டும் இவரை விட்டு வைக்குமா? ஷாம் ஆண்டன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த “டார்லிங்” என்ற ஹாரர் படத்தில் ஜி.வி பிரகாஷ் உடன் இணைந்து நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டும் இல்லாமல் படத்திலேயே இவ்வளவு அழகான பேய்யா!!! என்று ரசிகர்கள் கூறப்படும் அளவிற்கு அவருடைய நடிப்பும், அழகும் இருந்தது. இதனைத் தொடர்ந்து இவர் தமிழ் படங்களில் கூட பிஸியாக ஆனார்.

இதையும் பாருங்க : நடிகையை காதலிக்காதே என்று அஜித்திடமே சொன்ன நடிகர். ஷாலினி அஜித்தின் ஒரு ஸ்பெஷல் பிளாஷ் பேக்.

மேலும், இவர் தற்போது தமிழ், கன்னடம்,தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். மேலும்,நடிகை நிக்கி கல்ராணி நடிப்பு தவிர பல விளம்பர படங்களிலும், மாடலாகவும் நடித்து வருகிறார். நடிகைகள் எப்போதுமே படங்களில் பிஸியாகி விட்டால் தங்களோடு திருமணம் பற்றி பேசமாட்டார்கள், யோசிக்கவும் மாட்டார்கள். அந்த வகையில் நம்ம் டார்லிங் நிக்கி கல்ராணி அவர்கள் அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருந்தாலும் தன்னுடைய திருமணம் குறித்தும் காதல் குறித்து பேசியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு நிக்கி கல்ராணி தன் திருமணம் குறித்து பேசியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது என்று கூட சொல்லலாம்.

-விளம்பரம்-
Image result for Nikki Galrani"

மேலும்,பேட்டியில் அவர் கூறியது, நான் ஒருவரை காதலித்து வருகிறேன். அதனால் எனக்கு காதல் அனுபவம் உள்ளது. சில வருடங்களுக்கு மேலாக நாங்கள் காதலித்து வருகிறோம். என்னுடைய காதலர் சென்னையில் தான் இருக்கிறார். நான் அவரை முதன் முதலில் சென்னையில் தான் சந்தித்தேன். அவர் யாரென்று இப்போது நான் சொல்ல மாட்டேன். நேரம் வரும் போது கண்டிப்பாக நிச்சயம் சொல்கிறேன். அதுமட்டும் இல்லாமல் மூன்று வருடங்களுக்குப் பிறகு தான் எங்கள் திருமணம் நடைபெறும் என நிக்கி கல்ரானி ஓபன் ஆக பேசு இருந்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் தான் பல குழப்பங்கள் நிலவி வருகின்றது என்றும் கூறப்படுகிறது.

Advertisement