கைலாசாவில் இருந்து பேரரசுக்கு விருது அறிவித்த நித்தியானந்தா – இப்படி ஒரு விருதா ?

0
457
- Advertisement -

இயக்குனர் பேரரசுக்கு தர்மத்தின் பாதுகாவலர் என்ற விருதை ஆன்மீகவாதி நித்யானந்தா வழங்கி கௌரவத்திற்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்ந்தவர்பேரரசு. இவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்து இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் பேரரசு படங்கள் என்றாலே சண்டை, பாசம், நகைச்சுவை, அதிரடி வசனங்கள் என்று மசாலா திரைப்படமாக இருக்கும்.

-விளம்பரம்-

கடைசியாக இவர் 2015 ஆம் ஆண்டு வெளியாகி இருந்த சாம்ராஜ்யம் 2 என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த படம் மலையாளத்தில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது. இதன் பின்னர் இவர் சினிமா பக்கமே வராமல் ஒதுங்கி இருந்தார். பின் சிறிய இடைவெளிக்கு பிறகு கடந்த ஆண்டு வெளியான மின்மினி என்ற படத்தில் பேரரசு நடிகராக நடித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் பாடல்களை எழுதுவதிலும் பேரரசுக்கு அதிக ஆர்வம் உண்டு.

- Advertisement -

இயக்குனர் பேரரசு திரைப்பயணம்:

இவர் இயக்கிய திருப்பாச்சி, சிவகாசி போன்ற படங்களில் அனைத்து பாடல்களையும் பேரரசு தான் எழுதியிருந்தார். வல்லவன் படத்தில் வரும் அம்மாடி ஆத்தாடி என்ற பாடலை எழுதியதும் இவர் தான். அதுமட்டுமில்லாமல் சுந்தர் சி இயக்கத்தில் தற்போது வெளிவர இருக்கும் காபி வித் காதல் என்ற படத்தில் தியாகி பாய்ஸ் என்ற பாடலை பேரரசு தான் எழுதியிருக்கிறார். இந்த நிலையில் இயக்குனர் பேரரசிற்கு நித்யானந்தா விருது வழங்கியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நித்தியானந்தா வழங்கிய விருது:

அதாவது, பிரபல ஆன்மீகவாதியான நித்தியானந்தா இயக்குனர் பேரரசுக்கு தர்மத்தின் பாதுகாவலர் என்ற விருதை வழங்கி கௌரவித்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படத்தையும் இவர் சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார். அதில், ஸ்ரீ கைலாசா தன்னாட்சி மாநிலம் என அவர் தற்போது இருக்கும் நாட்டிற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. கைலாச நாட்டின் தர்ம ரட்சகர் அதாவது தர்மத்தின் பாதுகாவலர் விருது என்று குறிப்பிட்டு இருக்கிறது.

-விளம்பரம்-

சான்றிதழில் குறிப்பிட்டு இருப்பது:

இந்த விருது இந்து மதத்தை பாதுகாக்க மேற்கொண்ட முயற்சிகளுக்காக பேரரசுவுக்கு வழங்கப்படுவதாக அறிவித்திருக்கிறார். தற்போது இந்த விருது சான்றிதழ் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. போலி சாமியார் நித்தியானந்தாவை பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு சினிமா பிரபலங்களை விட சோசியல் மீடியாவில் சர்ச்சைகளில் சிக்கிய நாயகன். இந்து மத போதனைகளை பற்றி கூறி பாலியல் புகார்களில் சிக்கியவர் சாமியார் நித்யானந்தா.

நித்தியானந்தா குறித்த தகவல்:

இவருக்கு இந்திய நாட்டில் மட்டும் இல்லாமல் உலகில் பல நாடுகளில் ஆசிரமங்கள் உள்ளன.
உலக அளவில் இவருக்கு பக்தர்கள் உள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. இருந்தாலும், நித்தியானந்தா மீதும் அவர் நடத்தி வந்த ஆசிரமம் மீதும் பல புகார்கள் எழுந்து வருகின்றன. மத்திய அரசு நித்யானந்தாவை தீவிரமாக தேடி வருகிறது. அதோடு இவர் தனியாக தனக்கென ஒரு தீவை உருவாக்கி கைலாசம் என்று பெயர் வைத்து இருக்கிறார்.

Advertisement