samsung A7,Oneplus 6t -ஐ மிஞ்சுமா Nokia வின் புதிய 8.1..!

0
686
- Advertisement -

மொபைல் போன்களின் தாதாவாக இருந்த நோக்கியா நிறுவனம் ஆண்ட்ராய்டு போன்களின் வருகையால் அதல பாதாளத்திற்கு சென்றது. ஆனால், தற்போது மீண்டும் தலையெடுத்துள்ளது நோக்கியா நிறுவனம்.

-விளம்பரம்-

கடந்த சில ஆண்டுகளாக ஆண்ட்ராய்டு போன்களை வெளியிடாமல் இருந்த நோக்கியா இந்த ஆண்டு நோக்கியா 5.5.1,6,6.1,7,7.1 என்று பல மாடல்களை வெளியிட்டது. இந்நிலையில் சமீபத்தில் நோக்கியா 8.1 என்ற மிட் ரேன்ஞ் போன் ஒன்றை அறிமுகபடுத்தியுள்ளது.

- Advertisement -

இந்த போன் One plus 6t க்கு நிகரானது மேலும் samsung ன் A7 phonai விட நல்ல தேர்வா என்பதை பார்க்கலாம். விலையில் எடுத்துக்கொண்டால் நோக்கியா 8.1 ம் சாம்சங் A7 னும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் சொல்ல போனால் நோக்கியா A7 ஐ விட 1000 ருபாய் குறைவு தான்.

ஆனால், நோக்கியாவின் பாஸ்ட் சார்ஜ்ர், கேமராவில் OIS அதாவது Optial Image Stabilization போன்ற அம்சங்கள் இருக்கிறது. இது samsungல் இல்லை. அதே போல நோக்கியா Android One Programல் வருவதால் இரண்டு ஆண்டுகளுக்கு Update இல் எந்த தடங்கலும் வராது. இது samsung ல் மிகவும் வாய்ப்பு குறைவு.

-விளம்பரம்-

மேலும், நோக்கியவில் கொடுக்கப்பட்டுள்ள புதிய Snapdragan 710 Chip, One plus 6T நிகராக வேகம் இல்லை என்றாலும் அதற்கு மிக அருகில் செயல்பாடுகள் இருக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே, சிறந்த camera ,Android update வேண்டும் என்றால் நோக்கியா சிறந்த தேர்வாக இருக்கும். மேலும், இதுபோன்ற Tech செய்திகள் நம் இணையத்தில் பதிவு செய்ய உங்கள் விருப்பங்களை கம்மெண்ட்டில் தெரிவியுங்கள்.

Advertisement