தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கௌதம் கார்த்திக். இவர் தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகரான கார்த்திக் மகனும், மறைந்த நடிகர் முத்துராமனின் பேரனும் ஆவார். மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானார் கௌதம் கார்த்திக். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ராதாவின் இளைய மகள் துளசி நாயர் நடித்திருப்பார். இதனை தொடர்ந்து கௌதம் கார்த்திக் சிப்பாய், என்னமோ ஏதோ, வை ராஜா வை, இந்திரஜித் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் கௌதம் கார்த்திக் அவர்கள் சினிமா துறைக்குள் நுழைந்து எட்டு ஆண்டுகள் நிறைவடைந்தது. இந்நிலையில் சமீபத்தில் கௌதம் கார்த்திக் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் பல சுவாரசியமான விசயங்களைப் பகிர்ந்துகொண்டார். அதில் அவர் கூறியிருப்பது, தற்போது இருக்கும் முன்னணி நடிகர்கள் ஒவ்வொரு நடிக்க இருப்பதாக இருந்து சில காரணங்களால் அந்த படம் மிஸ் பண்ணினார்கள்.
அதற்கு என்று ஒரு லிஸ்ட் இருக்கும். அ தில் சில படங்களை ஏன் மிஸ் பண்ணினோம் என்று சில நடிகர்கள் வருத்தப்பட்டு இருக்கிறார்கள். அதிலும் ஒரு சில படங்களை நல்லவேளை மிஸ் பண்ணோம் என்று சந்தோஷப்பட்டும் இருக்கிறார்கள். ஆனால், நான் ஒரு நல்லப் படத்தை மிஸ் பண்ணியும் வருத்தப்பட வில்லை. ஆமாம், நான் “நானும் ரெளடிதான்” என்ற படத்தை மிஸ் பண்ணினேன்.
நான் அந்தப் படத்தைப் பண்ணாமல் விட்டதால் தான் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதற்கு பிறகு தான் அந்த படத்தில் விஜய் சேதுபதி அண்ணா நடித்தார். அதனால் தான் அந்தப் படம் ரொம்ப நல்லா வந்தது. நான் பண்ணியிருந்தால் இந்தளவுக்கு வந்திருக்குமா என்று தெரியாது. அந்த வகையில் நான் ஒரு நல்லப் படத்தை மிஸ் பண்ணதுக்கு சந்தோஷப்படுறேன் என்று கூறினார்.