மாஸ் அப்டேட் : மாஸ்டர் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.

0
1344
master

தமிழ் சினிமா உலகில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த “பிகில்” படம் மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது. பிகில் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் நடித்து உள்ள படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து உள்ளார். சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ஹோட்டல் லீலா அரண்மனையில் நன்முறையில் நடைபெற்றது.

இதில் மாஸ்டர் படம் நடிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் மட்டும் கலந்து கொண்டார்கள். மாஸ்டர் படத்தில் இருந்து அனைத்து பாடல்களும் வெளியாகி உள்ளது. சோசியல் மீடியாவில் தற்போது மாஸ்டர் படம் பாடல்கள் தான் பயங்கர ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்த பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

இதையும் பாருங்க : சண்டைக்கு முன்,சண்டைக்கு பின் – பேட்ட படத்துல எத்தன பேர் இந்த தவற கவனிசீங்க?

- Advertisement -

இந்நிலையில் தற்போது தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து கொண்டு செல்வதால் அனைத்து வித படப்பிடிப்புகளும் திரையரங்குகள் எல்லாம் மூடப்பட்டு உள்ளது. இதனால் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தார்கள்.

இந்நிலையில் தற்போது மாஸ்டர் படம் குறித்து ஒரு புதிய அப்டேட் வந்து உள்ளது. இது குறித்து பிரபல நிறுவனமான ஐ நாக்ஸ் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர்கள் கூறியிருப்பது, தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியிட உள்ளதாக தெரியவந்துள்ளது.

-விளம்பரம்-

விஜய் அவர்களின் சினிமா பயணத்தில் ஐந்து மொழிகளில் படம் வெளியீடுவது இதுவே முதல் முறையாகும் என்று குறிப்பிட்டு உள்ளார். மாஸ்டர் படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி வெளியீட்டிற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் புதுவித உற்சாகத்தை அளித்துள்ளது. தற்போது இந்த டீவ்ட் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

இந்த படத்தில் மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இந்த படத்தினை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து இருக்கிறது. மாஸ்டர் படம் ரீலிஸ் தேதிக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றன.

Advertisement