சண்டைக்கு முன்,சண்டைக்கு பின் – பேட்ட படத்துல எத்தன பேர் இந்த தவற கவனிசீங்க?

0
119040
petta
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் கார்த்திக் சுப்புராஜூம் ஒருவர். சினிமா உலகில் நுழைந்த சில காலத்திலேயே முன்னணி நடிகர்களின் படத்தை இயக்கும் இயக்குனர் ஆனார். இவர் மதுரை மாவட்டத்தில் பிறந்தவர். தனது பள்ளிப் படிப்பை மதுரையிலும், கல்லூரி படிப்பை திருப்பரங்குன்றத்திலும் முடித்தார். இவர் திரையுலகிற்கு வரும் முன்னர் பல்வேறு குறும் படங்களை இயக்கியுள்ளார். இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குறும்பட போட்டி நாளைய இயக்குனர் தொடரில் காட்சிப்பிழை, ராவணம், துரு, வி, நீர் என பல குறும்படங்களை இயக்கியுள்ளார். அதற்கு பிறகு தான் இவர் வெள்ளித்திரையில் இயக்குனர் ஆனார்.

-விளம்பரம்-
சண்டைக்கு முன் – ரஜினி அடிப்பதுக்கு முன்பாகவே ஓடும் காட்சி

இவர் 2012-ம் ஆண்டு குறைவான பட்ஜெட்டில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பீட்சா படத்தினை இயக்கி திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். இந்தப் படம் திகில் மற்றும் திரில்லர் பாணியில் இருந்தது. இத்திரைப்படத்திற்காக இவர் சிறந்த அறிமுக இயக்குனர் என்ற விருதினை பெற்று உள்ளார். இந்த பீட்ஸா படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. முதல் படமே இவருக்கு வெற்றி படமாக அமைந்தது.

இதையும் பாருங்க : பகவதி படத்துல அப்படி பண்ணதுக்காக விஜய் அண்ணா கிட்ட மன்னிப்பு கேட்கணும் – ஜெய் பேட்டி.

- Advertisement -

பீட்ஸா வெற்றியை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் 2014 ஆம் ஆண்டு நடிகர் சித்தார்த்தை வைத்து ஜிகர்த்தண்டா என்ற படத்தை இயக்கினார். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின்னர் இறைவி, மெர்குரி ஆகிய படத்தை இயக்கினார் கார்த்திக் சுப்புராஜ். மேலும், இவர் 2019 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து பேட்ட என்ற படத்தை இயக்கி இருந்தார்.

சண்டைக்கு பின் – வில்லன் வீட்டில் அதே நபர் முகத்தில் காயங்களுடன்

இந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த படம் வெளியாகி ஓராண்டுக்கு மேல் ஆகிய நிலையில் இந்த படத்தில் ஒரு காட்சியில் பிழை ஒன்று இருந்திருப்பதை நீங்கள் இதுவரை கவனித்திருக்க மாட்டீர்கள். இந்த படத்தின் ஒரு காட்சியில் மார்க்கெட்டில் சண்டை காட்சி ஒன்று வரும்.அப்போது சண்டை முடிந்த பின்னர் இறுதியில் புகைப்படத்தில் இருக்கும் இந்த நபர் ரஜினி அடிப்பதற்கு முன்பாகவேஓடி விடுவார். சொல்லப்போனால் இந்த சண்டைக்காட்சி முழுவதும் இவர் ஒரு ஓரத்தில் தான் நின்று கொண்டிருப்பார். ரஜினி இவரை அடித்து இருக்கவே மாட்டார்.

-விளம்பரம்-

ஆனால், இந்த காட்சி முடிந்து வில்லன் வீட்டில் நடக்கும் ஒரு காட்சியில் ரஜினிவில்லனிடம் பேசி விட்டு வெளியில் வரும்போது புகைப்படத்தில் இருக்கும் இதே நபரின் முகம் மற்றும் வாய் எல்லாம் வீங்கி இருக்கும். அதை நீங்கள் இந்த புகைப்படத்தில் காணலாம். சண்டைக் காட்சியின்போது ரஜினி இவரை ஒரு அடி கூட அடித்திருக்க மாட்டார். ஆனால், அடுத்த காட்சி இவரது முகத்தில் எப்படி காயம் வந்தது என்பதுதான் புரியவில்லை. இந்த கன்டினியூடியை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தான் கவனிக்கவில்லை என்றால் மற்றவர்கள் கூடவா கவனித்திருக்க மாட்டார்கள்.

Advertisement