மூன்றாம் நிலை கொரோனாவா? அரை குறை ஆடையில் ஆட்டம் போட்டு ரித்திகா பதிவிட்ட வீடீயோவை கலாய்க்கும் ரசிகர்கள்.

0
45084
Rithika-Singh
- Advertisement -

ஒட்டுமொத்த உலகையும் அச்சத்தின் விளிம்புக்கு கொண்டு சென்று விட்டது கொரோனா வைரஸ். இந்தியாவில் இதுவரை 1251 பேர் பாதிக்கப்பட்டும், 34 பேர் உயிர் இழந்தும் உள்ளார்கள். இந்த கொரோனா வைரசினால் இந்தியாவே ஆட்டம் கண்டுள்ளது. கொரோனா பரவாமல் இருக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் பிரபலங்கள் பலரும் உடற் பயிற்சிசெய்தும் வீட்டு வேலை செய்தும் சில விடீயோக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் பிரபல நடிகை ரித்திகா சிங் தனது தனிமையை போக்க வெளியிட்ட வீடியோ ஒன்று கிண்டலுக்குள்ளாகியுள்ளது.

-விளம்பரம்-

சினிமா துறையை பொருத்தவரை ஒரு சில நடிகைகள் நடிக்க வருவதற்கு முன்பாக மாடல் அழகிகளாகவோ விளம்பரத்தில் நடித்த நடிகைகளாக தான் இருப்பார்கள். ஆனால், குத்துச்சண்டை மேடையில் அதிரடி பெண்ணாக இருந்து தற்போது சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரித்திகா சிங். தமிழில் 2016 ஆம் ஆண்டு நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான “இறுதி சுற்று” படத்தில் கதாநாயகியை நடித்தவர் நடிகை ரித்திகா சிங்.

இதையும் பாருங்க : ‘பொய்கள் நிறைந்த உலகம்’ இணையத்தால் உலா வந்த சர்ச்சை வீடியோ. மறைமுகமாக பதில் அளித்த லாஸ்லியா.

- Advertisement -

அந்த படத்திற்கு பிறகு தமிழ், தெலுகு என்று ஒரு சில படங்களில் நடித்த இவர், தற்போது தனது உடலை மெருகேற்றிக்கொண்டு வருகிறார்.  23 வயதாகும் நடிகை ரித்திகா சிங் ஏற்கனவே மிக்சுடு மார்ஷல் அர்ட்ஸ் எனப்படும் குத்து சண்டை போட்டிகளில் கலந்து கொண்டவர். மேலும் அதில் இதுவரை ஒரே போட்டியில் மட்டும் தான் வெற்றிபெற்றுள்ளார்.

-விளம்பரம்-

இறுதி சுற்று படத்திற்கு பின்னர் தமிழில், விஜய் சேதுபதியுடன் ‘ஆண்டவன் கட்டளை’, லாரன்சுடன் ‘சிவலிங்கா’ போன்ற படத்தில் நடித்தார். தற்போது தமிழில் அரவிந்த் சாமி நடித்து வரும் ‘வணங்காமுடி’ படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகி இருந்த ஓ மை கடவுளே படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதையும் பாருங்க : உங்கள் படம் ஓட என் பெயர் தேவைபடுகிறதா? கூச்சமே இல்லாமல் கூறிய மீரா. கண்ட மேனிக்கு கிழிக்கும் ரசிகர்கள்.

எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரித்திகா சிங் அடிக்கடி எதாவது வீடீயோவை பதவிடுவார். அதிலும் ஊரடங்கள் தற்போது வீட்டில் இருப்பதால் சும்மாவா இருப்பார். சமீபத்தில் சின் சான் பாடலுக்கு குழந்தை தனமாக நடனமாடும் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், கொரோனா ஸ்டேஜ் 3, என்னசிம்ரன் இதெல்லாம் என கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். இதோ அந்த வீடியோ,

Advertisement