முஸ்லிமாக தான் பிறந்தேன், முஸ்லிமாக தான் இறப்பேன் – குஷ்பூவின் பழைய டீவீட்டை கிளறிய நெட்டின்சன். குஷ்பூ கொடுத்த விளக்கம்.

0
445
- Advertisement -

பல ஆண்டுகால போராட்டங்களுக்குப் பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அயோத்தி ராமர் கோவில் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அதன் பிறகு பிரம்மாண்டமாக ராமர் கோவிலை கட்ட பிரதமர் மோடி திட்டமிட்டு இருந்தார். அதன் படி பிரம்மாண்டமாக 1800 கோடி ரூபாய் செலவில் ராமர் கோயில் கட்டப்பட்டிருக்கிறது.கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாப்பிக்கே அயோத்தி ராமர் கோயில் குறித்த செய்தி தான். இந்தக் கோவில் நாட்டின் பாரம்பரியம் மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கட்டப்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

ஸ்ரீராம் உள்நாட்டு தீர்த்தத்தின்படி இராமர் கோயில் மூன்று அடுக்குகளை கொண்ட தளம். ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் உள்ளது. மொத்தம் 392 தூண்களையும், 44 கதவுகளையும் கோயில் கொண்டுள்ளது. இப்படி புகழ்பெற்ற அயோத்தி ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்களின் கனவு நினைவாகி இருக்கிறது.

- Advertisement -

இந்தியா நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான முழுவதும் அயோத்தி ராமர் கோயில் திறப்பு முழுவதும் காண வருகை தந்துள்ளனர். மேலும், இந்த நிகழ்வு பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் அரசியல் தலைவர்கள், இந்திய சினிமாவின் பிரபல பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். இந்த விழாவில் பா.ஜ.கவை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டு இருந்தனர்.

ஆனால், பா ஜ க தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ அயோத்தி விழாவிற்கு செல்லவில்லை. இதனிடையே ‘ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் நான் பங்கேற்கவில்லை’ என அறிவித்த அவர் ‘தற்போது பிரதமர் மோடி அவர்களின் ஆட்சியில் நாம் ராமரை பார்க்க இருக்கிறோம். ரொம்ப பெருமையாகவும் சந்தோஷமாகவும் உள்ளது’ என்றும் தெரிவித்து இருந்தார்.இந்நிலையில், குஷ்பூ தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ராமர் குறித்து இரண்டு வரிகளில் பாடல் பாடி வெளியிட்டிருந்தார்.

-விளம்பரம்-

மேலும் இதுகுறித்து பதிவிட்ட அவர் ‘அயோத்தியில் உள்ள ராமர் கோவில் அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக கடவுள் ராமர் குறித்து இரண்டு வரிகளை கூறுகிறேன். ராமரைக் கொண்டாடும் இந்தமங்களகரமான நேரத்தில், ஸ்ரீராம பக்தர்களை இந்த இரண்டு வரிகளைப் படித்து பக்தி மற்றும் ஆன்மீகத்தின் செய்தியைப் பரப்ப அழைக்கிறேன்’ என்று பதிவிட்டு இருந்தார். குஷ்பூ இந்த பதிவிற்கு லைக்ஸ்கள் குவிந்தது.

அதே சமயம் ட்விட்டர் வாசி ஒருவர் 2018 ஆம் ஆண்டு குஷ்பூ காங்கிரஸ் கட்சியில் இருந்த போது பதிவிட்ட பதிவு ஒன்றை பகிர்ந்து இருந்தார். அந்த பதிவில் குஷ்பூ ‘ நான் முஸ்லிமாக தான் பிறந்தேன் முஸ்லிமாக தான் இருப்பேன் அதை நான் கண்டிப்பாக மாற்றிக் கொள்ள மாட்டேன். மதத்தின் விதிகளின்படி நான் வாழவில்லை. நான் சம உரிமை, மனிதத்தன்மை போன்ற விதிகளுடன் வாழ்கிறேன். பா ஜ க தான் வேறு விதிகளை வைத்திருக்கிறதோ என்னவோ என்று அந்த பதிவில் குறிப்பிட்டு இருகிறார்.

இதனை தற்போது நெட்டிசன் ஒருவர் சுட்டிகாட்ட, அதற்கு பதில் அளித்துள்ள குஷ்பூ ‘நான் சாகும் வரை முஸ்லீம் தான். நான் மதம் மாறவில்லை, மாறவும் மாட்டேன். உங்களை பொறுத்தவரை ஆன்மீகம் மதம் சார்ந்தது. ஆனால் என்னை பொறுத்தவரை அது ஒருமைப்பாடு பற்றியது. கடவுள் ஒருவர் என்று நான் நம்புகிறேன். ராமர் அனைவராலும் வணங்கப்படுகிறார். உங்கள் எண்ணங்களை விரிவுபடுத்துங்கள், நீங்கள் நன்றாக உணருவீர்கள்” என்று கூறியுள்ளார்.

Advertisement