‘அந்தக் காரணத்த கண்டிப்பா சொல்லப் போறதில்ல’ – சந்தியாராகம் சீரியலில் இருந்து விலகிய தாரா.

0
199
- Advertisement -

சந்தியா ராகம் சீரியல் இருந்து முக்கிய நடிகை விலகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜீ தமிழில் ஒளிபரப்பாகி இருக்கும் தொடர் சந்தியா ராகம். இந்த தொடர் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை இந்த சீரியல் 75 எபிசோடுகளை கடந்து இருக்கிறது. மேலும், இந்த தொடரில் ஜானகி -சந்தியா என்ற இரு சகோதரிகள் இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இதில் தன்னுடைய அக்கா ஜானகிக்கு பார்க்கும் மாப்பிள்ளையை தங்கை சந்தியா திருமணம் செய்து கொள்கிறார். இதனால் வீட்டில் உள்ள அனைவருமே அதிர்ச்சி அடைகிறார்கள். பின் சந்தியாவை அவமானப்படுத்தி அவருடைய அப்பா வீட்டை விட்டு துரத்தி விடுகிறார். அதற்கு பிறகு சந்தியா தன்னுடைய குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கிறார். இருந்தாலும், தன்னுடைய சகோதரி ஜானகியை நினைத்து சந்தியா வருத்தப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

சந்தியா ராகம் சீரியல்:

இன்னொரு பக்கம் ஜானகி வருத்தப்பட்டு தங்கை சந்தியாவை நினைத்து வருத்தப்படுகிறார். இப்படி இருக்கும் போது சந்தியாவை பார்க்க ஜனனி செல்கிறார். அப்போது மாயாவின் அம்மா சந்தியா புற்றுநோயால் இறந்து விடுகிறார். இதனால் தன்னுடைய தங்கையிடம் செய்த சத்தியத்திற்காக ஜானகி மாயாவை இந்தியாவிற்கு தன்னுடைய சொந்த ஊருக்கு அழைத்துக் கொண்டு வருகிறார். மாயா வெளிநாட்டில் சுதந்திரமாக வாழ்ந்ததால் இவருக்கு கிராமத்தில் வாழ்வது பிடிக்கவில்லை.

மாயா செய்யும் வேலை:

தன்னுடைய அம்மாவின் கடைசி ஆசைக்காக பொறுத்துக் கொண்டிருக்கிறார் மாயா. இருந்தாலும் அவருடைய எல்லா விஷயத்திலும் கட்டுப்பாட்டுகள் வருவதால் எப்படியாவது இந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மாயா நினைக்கிறார். நாட்கள் செல்ல செல்ல ஜானகியின் பாசத்தையும், தனத்தின் உண்மையான அன்பையும் மாயா புரிந்து கொள்கிறார். அதற்குப்பின் அந்த வீட்டிலேயே மாயா பொறுத்துக் கொண்டு வாழ்கிறார்.

-விளம்பரம்-

சீரியல் கதை:

தற்போது சீரியலில் தனம் படிக்கும் கல்லூரிலேயே மாயாவும் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். அப்போது ஆடை குறித்து கல்லூரியில் பிரச்சனை வருவதால் தனம்- மாயா போராட்டம் செய்கிறார்கள். மாயாவின் எண்ணம் சரியாக இருப்பதை புரிந்து கொண்டு ரகுராம் அவருக்கு துணையாக நிற்கிறார். இப்படி சீரியல் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் சீரியல் இருந்து முக்கிய பிரபலம் விலகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீரியலை விட்டு விலகிய நடிகை:

அதாவது, இந்த சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் விஜே தாரா. இவர்தான் தற்போது திடீரென்று சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். இவருக்கு பதிலாக பாவனா லஷ்யா தற்போது தனம் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். மேலும், இது குறித்து நடிகை தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராமில், கனத்த இதயத்துடன் சந்தியா ராகம் தொடரில் இருந்து நான் வெளியேறுகிறேன். என்ன பிரச்சனை? என்பதை கண்டிப்பாக வெளியில் சொல்ல முடியாது என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள், சீரியல் குழுவுடன் ஏற்பட்ட பிரச்சினையால் தான் இவர் வெளியேறி இருப்பார் என்றெல்லாம் கூறி வருகிறார்கள்.

Advertisement