‘நான் அந்த ராமசாமி இல்ல’ சர்ச்சையான பொங்கல் வாழ்த்து, வீடியோவை நீக்கிய சந்தானம். வைரலாகும் ஸ்க்ரீன் ஷாட்.

0
366
- Advertisement -

பெரியார் குறித்து மறைமுகமாக ட்வீட் போட்ட சந்தானத்தை பலரும் விமர்சித்து வரும் நிலையில், சந்தானம் குறித்து PTR பேசிய வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. சந்தானம் நடித்த டிக்கிலோனா பட இயக்குனர்  கார்த்திக் யோகி இயக்கி இருக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் சந்தானதிற்க்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

அந்த ட்ரைலரில் ‘நேர்ல பாக்கல’ என்ற ஒற்றை வார்த்தையை வைத்து செய்யும் வார்த்தை வித்தை தொடக்கத்தில் படம் நகைச்சுவைக்கான கியாரன்டி கொடுப்பதை உறுதி செய்கிறது. ‘சாமியே இல்லன்னு ஊருக்குள்ள சொல்லிட்டு திரிஞ்சியே அந்த ராமசாமி தானே நீ’ என்ற வசனம் சமூக வலைதளத்தில் பேசுபொருளானது. குறிப்பாக பெரியாரை குறிப்பிட்டு இந்த வசனம் வைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இப்படி ஒரு நிலையில் பொங்கல் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘நான் அந்த ராமசாமி இல்லை’ என்று குறிப்பிட்டு இருந்தார். இதனை கண்ட பலரும் சந்தானத்தை திட்டி தீர்த்து வந்தனர்.

- Advertisement -

சந்தானம் இந்த பதிவை நீக்கினாலும் இதனுடைய ஸ்க்ரீன் ஷாட் தற்போதும் வைரலாகி வருகிறது. இதனால் சந்தானத்தை பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் PTR சந்தானம் குறித்து பேசிய பழைய வீடியோ ஒன்றி வைரலாகி வருகிறது. அதில் பேசியுள்ள அவர் ‘ ஜக்கி வாசுதேவன், சந்தானம் போன்றவர்கள் தீய சக்தியாக நான் கருதுகிறேன். மத நல்லிணக்கத்தை உடைத்து சமுதாயத்தில் மத கலவரத்தை உருவாகும் தீய சக்த்திகள்’ என்று பேசி இருக்கிறார்.

சத்குருவிற்கு சாமானிய மக்களை போல தமிழ் திரையுலகில் பல நடிகர் நடிகைகளும் பக்தர்கள் தான். அந்த வகையில் சந்தானமும் சத்குருவின் தீவிர பக்தர் தான். கடந்த சில ஆண்டுக்கு முன்னர் கூட சத்குரு, கோவில்களை எல்லாம் அரசாங்கத்திடம் இருந்து மக்கள் எடுத்துகொண்டு அவர்களே பராமரிக்க வேண்டும் என்று கூறியது சர்ச்சையானது. இதனை தொடர்ந்து சந்தானம் சதகுருவிற்கு ஆதரவாக ட்வீட் ஒன்றை போட்டு இருந்தார்.

-விளம்பரம்-

அதில்’ சத்குருவின் கருத்தை முற்றிலும் ஒப்புக்கொள்கிறேன். பக்தர்களிடம் கோவில்களை விட்டுவிடுங்கள்’ என்றும் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து சந்தானத்தை பலரும் திட்டி தீர்த்து ட்வீட் போட்டனர். இப்படி ஒரு நிலையில் சத்குருவுடன் பேட்டி ஒன்றில் பேசிய சந்தானம், நான் படப்பிடிப்புக்காக பல்வேறு இடங்களுக்கு சென்றிருக்கிறேன். அப்போது,  நிறைய கோவில்களில் பராமரிப்பு இல்லாமல் இருந்ததை நானே பார்த்திருக்கிறேன்.

இங்கு வரும் வருமானத்தை வைத்து எதுவும் செய்ய முடியவில்லை, உங்களால் ஏதாவது உதவி செய்ய முடியுமா? என்று என்னிடம் கோவில் நிர்வாகிகள் கேட்டனர்.  எனவே, சத்குருவின் அந்த ட்வீட் எனக்கு சரி என்று பட்டது. ஆதரித்து நான் ட்வீட் போட்டேன். உடனே என்னையும் சங்கி என்று பலர் கமென்ட் செய்து திட்ட ஆரம்பித்தனர். ஏன் உங்களுக்கு இந்த தேவையில்லாத வேலை? இதை ஏன் நீங்கள் செய்கிறீர்கள்? என்றும் கேள்வி எழுப்பினார்கள்’ என்று கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement