தேர்தல் நெருங்கும் நேரத்தில் நடிகர் விஜய் சேதுபதி பேசியிருந்த பழைய வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் குறித்த செய்திகள் தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் குறித்த வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் திமுக கட்சியுடன் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் இணைந்து இருக்கிறார். பின் சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் சரத்குமார் இணைந்து இருக்கிறார். இப்படி அரசியல் கட்சிகள் கூட்டணி வைத்தும், தீவிரமாக ஆலோசனைகளை நடத்தியும் வருகிறார்கள். மேலும், இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி பேசி இருந்த பழைய வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை கிளப்பி இருக்கிறது.
வீடியோவில் விஜய் சேதுபதி சொன்னது:
அதில் அவர், அன்பார்ந்த வாக்காளர் பெருமக்களே, தயவு செய்து சிந்தித்து ஓட்டு போடுங்கள். பார்த்து ஓட்டு போடுங்கள். ஓட்டு போடுவது ரொம்ப முக்கியம். எப்போதும் நம் ஊரில் ஒரு பிரச்சனை, கல்லூரியில் ஒரு பிரச்சனை, பள்ளியில் பிரச்சனை, நண்பர்களுக்கு பிரச்சனை என்று கூப்பிடுபவர்களை நம்பி ஓட்டு போடலாம். ஆனால், மதம்- ஜாதியை வைத்து பேசுபவர்களுக்கு ஓட்டு போடாதீர்கள். அவர்கள் உங்களை கோர்த்துவிட்டு அவர்கள் நிம்மதியாக இருப்பார்கள் என்று பேசி இருக்கிறார்.
மத அரசியல் பண்றவனுக்கு மட்டும் ஓட்டு போட்டுறாதீங்க 🔥🔥#Tamilnadu_Rejects_bjp pic.twitter.com/iSFsdzs5Ln
— மெட்ராஸ் பையன் (@madraspaiyan_) March 18, 2024
நெட்டிசன்கள் கருத்து:
இப்படி இவர் பேசியிருந்த வீடியோ வரை தற்போது இணையத்தில் சர்ச்சையாகி இருக்கிறது. இதை பார்த்து பலருமே பாஜக மோடியை விமர்சித்து தான் இவர் பேசுகிறார். பாஜகவிற்கு ஓட்டு போட வேண்டாம் என்று தான் மறைமுகமாக விஜய் சேதுபதி சொல்லி இருக்கிறார் என்றெல்லாம் கூறி வருகிறார்கள். இதற்கு விஜய் சேதுபதி தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
விஜய் சேதுபதி திரைப்பயணம்:
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றுள்ளது. இவர் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே தன்னுடைய கடின உழைப்பால் அபார வளர்ச்சி அடைந்தவர். ஆனால், விஜய் சேதுபதி அவர்கள் அடுத்தடுத்த படங்களை வெளியிட்டு நிலையில் சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் தோல்வியில் தான் முடிவடைந்தது.
விஜய் சேதுபதி படங்கள்:
மேலும், இவர் வில்லனாகவும், சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் படங்கள் மட்டும் ஹிட் அடித்து விடுகிறது. அந்த வகையில் விஜய் நடிப்பில் வந்த மாஸ்டர், தெலுங்கு படம், கமலஹாசன் நடித்த “விக்ரம்” படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வில்லனாக நடித்திருந்தார். இதை அடுத்து சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியிருந்த ஜவான் படம் நல்ல வசூல் சாதனை செய்து இருந்தது. தற்போது இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.