தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை வைத்து சமூக கருத்து சொல்லும் படங்கள் வருவது சகஜமான ஒன்று தான். ஆனால் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த ஒரு நடிகரை வைத்து படமாக்குவது என்பது சாதாரண காரியம் கிடையாது. அதேபோல அதனை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகம்தான். அந்த வகையில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் “வெள்ளிமலை”. இப்படத்தை சூப்பர் கிரியேஷன் நிறுவனம் தயாரித்து இயக்குனர் ஓம் விஜய் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் சூப்பர்குட் சுப்ரமணியன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மேலும் துணை கதாநாயகனாக வீர சுபாஷ் மற்றும் கதாநாயகியாக அஞ்சு கிருஷ்ணா நடித்திருக்கின்றனர். சித்த மருத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம் வாருங்கள்.
கதைக்களம் :
வெள்ளிமலை என்ற ஒரு அழகான மலை கிராமத்தில் பாரம்பரிய சித்த மருத்துவம் செய்து வருகிறது சூப்பர்குட் சுப்ரமணியின் குடும்பம். ஒருமுறை குட் சுப்ரமணி சிறு வயதில் தவறான சிகிச்சை கொடுத்தது ஒருவர் மரணம் அடைந்த காரணத்தினால் அவரின் மருத்துவத்தை அந்த ஊரின் மக்கள் கடுமையாக எதிர்க்கின்றன. இருந்தாலும் தன்னுடைய பாரம்பரிய மருத்துவத்தை மறக்க கூடாது என்பதற்காக தொடர்ந்து பயிற்சி செய்து வருகிறார். இந்த நிலையில் திடீரென கிராமத்திற்குள் தோல் அரிப்பு நோய் வருகிறது. இந்த நோய் தீவிரமாக பலரும் பரவ பலரும் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இதில் ஒருவர் சுப்பிரமணியின் வைத்தியத்தினால் குணமாகிறார் அதனைத் தொடர்ந்து ஊர் மக்கள் சுப்பிரமணியிடம் வைத்தியம் பார்க்க வருகின்றனர். இந்நிலையில் நோயை தீர்க்கும் மூலிகை தன்னிடம் இல்லை என்றும் அது மலை உச்சியில் தான் இருக்கிறது என்றும் சிலருடன் மலையேறுகிறார் குட் சுப்ரமணியன். இப்படி மலையில் மூலிகையை தேடும் அவர் அந்த மூலிகையை கண்டுபிடித்தாரா? அந்த ஊர் மக்களை காப்பாற்றினாரா? என்பதுதான் மீதி கதை.
தமிழர்களால் மறக்கப்பட்ட சித்த மருத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவம் எந்த அளவிற்கு மக்களுக்கு உதவுகிறது என்று கூட தெரியாமல் அதனை உதாசீனப்படுத்தி வருவதை இப்படம் கூறுகிறது. ஆனால் படத்தை இரண்டு மணி நேரத்தில் முடிக்க வேண்டும் என்று இயக்குனர் கொஞ்சம் வேகமாக எடுத்த சில காட்சிகள் குறைவாக இருப்பதாக தோன்றுகிறது.
சூப்பர்குட் சுப்ரமணியன் நடப்பு மிகச் அருமையாக இருந்தது கதைக்கு ஏற்றவாறு பிரமாதமாக நடித்திருந்தார். அதேபோல நாயகியாக வரும் அஞ்சு கிருஷ்ணாவும் நடிப்பதற்கு அழகும், கலரும் மட்டும் தேவையில்லை என்பதற்கு இவர் ஒரு உதாரணமாக இருக்கிறார். ஊர் மக்களாக வருபாவர்கள் தேனி மலை கிராமத்தை சேர்ந்தவர்களாக இருப்பதினால் எதார்த்தமாக படமானது உருவாகியிருக்கிறது. ஆனால் பொதுவாக சித்த மருத்துவர்கள் சதை அளவாகவும் உடல் பருமன் இருக்காமல் இருப்பார்கள் ஆனால் கதாநாயகன் அதற்கு எதிர்மறையாக இருக்கிறார்.
மேலும் படத்தில் அதிகமாக மரண காட்சிகள் இருந்தான அவற்றினை குறைத்திருக்கலாம். தேனி மாவட்டத்தில் உள்ள மேக மலையை ஊடுருவி சென்று அங்கே ஒழிப்பதிவு செய்த மணிபெருமாளின் ஒழிப்பதிவு மிகவும் சிறப்பாகவே இருந்தது. அதேபோல பின்னணி இசையில் என்.ஆர் ரகுநந்தனின் இசை மிகச்சிறப்பு. சில குறைகள் இருந்தாலும் சுவாரசியமான திரைக்கதை அவற்றை மறைக்கிறது. மேலும் கிரிஜா, சார்லஸ், பாண்டியன், கவிராஜ், விஜயகுமார் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் படத்திற்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கின்றனர். நகைச்சுவை கொஞ்சம் வைத்திருந்திருக்கலாம் மற்றபடி படம் நன்றாக இருந்தது.
குறை :
அதிக மரணங்கள் ஏற்ப்படுவது கொஞ்சம் அசௌகரியமாக இருந்தது.
காமெடி வைத்திருக்கலாம்.
சொல்லவரும் கருத்தை கொஞ்சம் ஆழமாக சொல்லியிருக்கலாம்.
நிறை :
சூப்பர்குட் சுப்ரமணியன் நடிப்பு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.
ஒளிப்பதிவு, இயக்கம், இசை அனைத்தும் பிரமாதம்.
துணை கதாபாத்திரங்கள் கதைக்கு தேவையானதை நடித்திருக்கின்றனர்.
கிராம மக்களுக்கு மலைவாசி மக்களையே தேர்ந்தெடுத்து படத்திற்கு ஏதார்த்தத்தை கூட்டியது.
மொத்தத்தில் இயற்கை வைத்தியத்தின் மேன்மையையும் அதன் பெருமையையும் கூறும் வகையில் இப்படமானது உருவாக்கி இருக்கிறது கண்டிப்பாக இந்த படத்தை ஒருமுறை பார்க்கலாம்