அந்த பொண்ணுக்கு பெரிய இதுன்னு நெனப்பு.! பிரியா வாரியரை அறிமுகம் செய்த இயக்குனர் விளாசல்.!

0
793
Priya
- Advertisement -


ஒரே நைட்டில் ஒபாமா ஆக போகிறேன் என்று வடிவேலு ஒரு படத்தில் கூறி இருப்பார். ஆனால் ஒரே ஒரு பாடல் முலம் உலக பேமஸ் ஆனவர் மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். ஒரு ஆதர் லவ் என்ற ஒரே ஒரு படத்தின் மூலம் உலகளவில் பிரபலமடைந்தவர் நடிகை ப்ரியா வாரீர்.

-விளம்பரம்-

தற்போது ஸ்ரீதேவி பங்களா என்ற புதிய இந்தி படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியத்தியதோடு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.

இதையும் படியுங்க : மார்பில் டாட்டூ குத்திக்கொண்ட ப்ரியா வாரியர்.! அதோட அர்த்தம் இதானாம்.! 

- Advertisement -

மேலும், இந்த படத்தில் நடித்து வரும் ப்ரியா வாரியார் மீதும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது ‘ஒரு ஆதார் லவ்’ படத்தின் மூலம் அறிமுகம் செய்த ஓமர் லூலு பிரியா வாரியரை கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

சமீபத்தில் வெளியான இந்த படம் பெரும் தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் இந்த படத்தின் தோல்வி குறித்து பேசியுள்ளார். அதில், படப்பிடிப்பு துவங்கும் போது அனைவரும் ஒன்றும் தெரியாதவர்களைப் போன்றுதான் இருந்தார்கள், அதைத்தான் நானும் விரும்பினேன். ஆனால், திடீரென்று ஒரு சிலர் பிரபலமடைந்து விட்டார்கள்.

-விளம்பரம்-

அப்போதுதான் பிரச்சனையே துவங்கியது, இந்த படத்தில் நடித்த பிரியா வாரியர் மற்றும் ரோஷன் இருவரும் மிகவும் அலட்டலாக இருந்தனர். இந்த படத்தின் கதையை தெரியாமலேயே இந்த படத்தைப் பற்றிய பல்வேறு கருத்துக்களை அவர்கள் கூறிவிட்டார். இந்த படத்தின் தோல்விக்கு காரணம் அவர்கள்தான் என்று புலம்பி உள்ளார் இயக்குனர்.


Advertisement