மாட்டுக்கறி கேட்டதால் தான் விக்ரமன் தோற்கடிக்கப்பட்டாரா – பத்திரிக்கையாளர் கேள்விக்கு நச் பதில் அளித்த பா.ரஞ்சித்.

0
701
vikraman
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6 சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன், ரச்சித்தா,adk,கதிர், அசீம், விக்ரமன், ஷிவின், மைனா நந்தினி, அமுதவனான் என 21 பேர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முடிவின் போது பொங்கல் நாளன்று போட்டியாளர்கள் பொங்கல் கொண்டாடினர்.

-விளம்பரம்-
vikraman

பொங்கலன்று மாட்டுக்கறி கேட்ட விக்ரமன் :

இதைத் தொடர்ந்து பொங்கல் திருநாளை முன்னிட்டு இறுதி வாரத்தில் இருக்கும் ஐந்து போட்டியாளர்களுக்கும் பிக் பாஸ் விருந்துகளை அனுப்பி வைத்திருந்தார். அதற்கு முன்பாக தங்களுக்கு பிடித்த உணவுகளை கேமரா முன்பு சென்று போட்டியாளர்கள் பலரும் கேட்டிருந்தார்கள். அந்த வகையில் விக்ரமன் கேமரா முன் சென்று தனக்கு ஒரு Beef பிரியாணி, ரைத்தா, பிரட் அல்வா போன்றவை வேண்டும் என்று கேட்டு இருந்தார

- Advertisement -

விக்ரமன் பிக் பாஸ் இடம் மாட்டு கரி கேட்டு இருக்கும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு சிலர் தமிழர் திருநாளான மாட்டுப் பொங்கல் என்று மாட்டு கறி கேட்பீர்களா என்று விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆனால், மற்றொருபுறம் மாட்டுக்கறி என்பது ஒரு அரசியல் சார்ந்த கருத்துக்களை கொண்ட உணவு அதில் ஏகப்பட்ட அரசியல் இருக்கிறது அதனால் தான் விக்ரமன் அப்படி கேட்டார் என்றும் கூறி வருகிறார்கள்.

வரவேற்புகளும், எதிர்ப்புகளும் :

பிக் பாஸ் வரலாற்றில் முதல்முறையாக இந்த சீசனில் தான் ஒரு அரசியல் பிரபலம் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். விக்ரமன், விடுதலை சிறுத்தை கட்சியின் உறுப்பினர் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். மேலும், அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் கூட மாட்டு இறைச்சி அரசியல் குறித்து பல மேடைகளில் பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இப்படி பல லட்சம் பேர் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் தைரியமாக மாட்டுக்கறியை பற்றி விக்ரமன் பேசி இருப்பது ஒரு பக்கம் பாராட்டையும் ஒரு பக்கம் விமர்சனத்தையும் பெற்று வருகிறது.

-விளம்பரம்-

இயக்குனர் பா.ரஞ்சித் :

இந்த நிலையில் தான் இது குறித்து பிரபல சினிமா இயக்குனர் பா ரஞ்சித்திடம் கேட்கப்பட்டது. பா ரஞ்சித் தமிழில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இய்குணராக அறிமுகமானவர் இயக்குனர் ரஞ்சித். அந்த திரைப்படம் இளஞ்சர்கள் இயக்குனர் ஒரு வெற்றி படமாக பார்க்கப்ட்டது. அதன் பின்னர் இவர் கார்த்தியை வைத்து மெட்ராஸ் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் ஹிட் அடித்தது தொடர்ந்து ரஜினி, விக்ரம் போன்றவர்களை வைத்து படம் இயக்கி முற்போக்கான கருத்துக்களை கூறி வருகிறார்.

பா. ரஞ்சித் கூறியது :

இந்த நிலையில் தான் பிக் பாஸ் வீட்டில் கடைசி நாள் வரை ரசிகர்கள் மத்தியில் புகழுடன் இருந்த விக்ரமன் பொங்கலுக்கு மாட்டுக்கறி கேட்டனால்தான் விக்ரமன் வெற்றிபெறவில்லையா என கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த இயக்குனர் பா ரஞ்சித் “பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி எனக்கு உடல்பாடில்லை, நான் மாட்டுக்கறி சாப்பிட்டு கொண்டுதான் இருக்கிறேன் வெற்றியடைந்து கொண்டும் தான் இருக்கிறேன் என்று நக்கலாக கூறினார் இயக்குனர் பா. ரஞ்சித்.

Advertisement