குறிப்பிட்ட ஆட்களை வைத்து மட்டும் தான் படம் எடுக்கிறேன் என்று சொல்கிறார்கள். அதற்கு காரணம் இதான் – ஓப்பனாக பேசிய ரஞ்சித்.

0
390
- Advertisement -

தன் படங்களில் பணியாற்றுபர்கள் குறித்து ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றி விழாவில் பேசிய இருக்கிறார் இயக்குனரும் தயாரிப்பாளருமான பா ரஞ்சித். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் பா.ரஞ்சித். இவர் இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்றிருக்கிறது. இவர் ஜாதிகளை மையமாக வைத்து தான் படங்களை கொடுத்து வருகிறார்.

-விளம்பரம்-

இதனால் இவர் படங்கள் குறித்தும், இவர் மீதும் விமர்சனங்கள் இருக்கிறது. மேலும், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் தற்போது பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ப்ளூ ஸ்டார். இந்த படத்தை இயக்குனர் ஜெயக்குமார் இயக்கியிருக்கிறார் இந்த படத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி, லிசி ஆண்டனி உட்பட பல நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

ப்ளூ ஸ்டார் படம்:

கோவிந்த் வசந்த் இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து இயக்குனர் கதைக்களத்தை கொடுத்திருக்கிறார். ஊர் தெரு மற்றும் காலனி தெரு ஊர் இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டியும் அதனால் ஏற்படும் பிரச்சனை குறித்து தான் படத்தில் பேசப்பட்டிருக்கிறது. அதோடு ஊர் தெரு மற்றும் காலனி தெரு மக்கள் இணைந்தால் என்ன நடக்கும்? என்பதையும் இயக்குனர் படத்தில் காண்பித்திருக்கிறார்.

படம் குறித்த தகவல்:

படத்தின் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை இயல்பான காட்சிகளே தான் இருக்கிறது. நகைச்சுவையும் படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தினுடைய வெற்றி விழா சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இதில் இயக்குனர்கள், நடிகர்கள் என பட குழுவினர் பலருமே கலந்து கொண்டிருந்தார்கள். இவர்களுடன் தயாரிப்பாளர் பா.ரஞ்சித்தும் விழாவிற்கு வந்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த விழாவில் பேசிய ரஞ்சித் ‘என்னை வெறும் ரஞ்சித்தா பார்க்கமாட்டாங்க. நான் பேசற அரசியலை வச்சி தான் என்னை பார்ப்பாங்க. நான் என்னுடைய ஆளுங்க கூட மட்டும் தான் வேலை பார்ப்பேன்னு சொல்வாங்க. நான் அடையாள அரசியல் பண்றேன்னு சொல்வாங்க. ஆனால், அதையெல்லாம் நான் நம்பறது இல்லை. எனக்கு என்ன பிடிச்சு இருக்கோ, எனக்கு என்ன தேவையோ அதை தான் நான் செய்றேன். என்னுடைய உழைப்பத்தான் நான் நம்பறேன்.

என்னை நம்புபவர்கள் மற்றும் என்னை ஏற்றுக் கொள்பவர்கள் தான் என்னுடன் பணியாற்ற முடியும் என்று கூறியுள்ளார். மேலும் பேசிய ரஞ்சித்’விழாவில் கலந்து கொண்ட படத்தின் தயாரிப்பாளர் பா ரஞ்சித், நீலம் ப்ரொடக்ஷன் படம் சென்சாருக்கு வருகிறது என்றாலே படத்தில் இதெல்லாம் இருக்கப்போகிறது என்று தணிக்கை குழு ஒரு அலார்ட் ஆகிவிடுவார்கள். இது தான் ரஞ்சித் படங்களில் இருக்கும் என்று அவர்கள் நினைத்து கொண்டு இருக்கிறார்கள். அதேபோல் ப்ளூ ஸ்டார் படம் வெளியாக கூடாது என்று பல சர்ச்சைகள் வந்தது.

சென்சார் போர்ட் குறித்து சொன்னது:

இது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த படத்தை வெளியக்கூடாது என்பதில் மும்முரமாக இருந்தார்கள். என்னை ரஞ்சித்தாக யாரும் பார்ப்பதில்லை. நான் பேசும் அரசியலை தான் கவனிக்கிறார்கள். நான் பேசும் அரசியல் பலரை என்னிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது என்றெல்லாம் பேசி இருக்கிறார். இப்படி வெற்றி விழாவில் பா ரஞ்சித் பேசிய பேச்சுதான் தற்போது சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக இருக்கிறது.

Advertisement