ஜே.பேபி படம் கலெக்ஷன் பண்ணாது – தான் தயாரித்த படம் குறித்து பா.ரஞ்சித் ஓபன் டால்க்.

0
130
PARanjith
- Advertisement -

ஜிவி பிரகாஷ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பா. ரஞ்சிக் கூறியிருக்கும் கருத்து தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கோலிவுட்டில் மிக பிரபலமான இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் சாதித்து வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் இரு ஆஸ்கார் விருதுகளை அள்ளி வந்து பெருமை சேர்த்த இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் அக்கா மகன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜிவி பிரகாஷ் அவர்கள் முதன் முதலாக வெயில் என்ற படத்தில் இசை அமைத்து தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் வெளிவந்த பாடல்கள் எல்லாம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர் நிறைய படங்களில் இசை அமைத்து இருக்கிறார். பின் இவர் ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தில் ஒரு பாடகனாக அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் இவர் ஹீரோவாக நடிக்கவும் தொடங்கினார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. ஆனால், சமீப காலமாக இவர் படங்கள் எதுவும் எதிர்பார்த்த அளவிற்க்கு வெற்றியை கொடுக்கவில்லை. தற்போது ஜிவி பிரகாஷ் நடிப்பில் புதுமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ரெபல்.

- Advertisement -

ரெபல் படம்:

இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் குமார், மமிதா பைஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். காதல் ஆக்சன் கலந்த திரில்லர் படமாக இயக்குனர் கொடுத்திருக்கிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார் இந்த படம் இயக்குனரின் உறவினர் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து தான் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படம் மார்ச் 22 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் ரெபர் படத்தினுடைய ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடைபெற்று இருக்கிறது.

விழாவில் பா.ரஞ்சித் சொன்னது:

அதில் கலந்து கொண்ட இயக்குனர் பா ரஞ்சித், தங்கலான் படத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாக்கி இருக்கும் பாடல்கள் எல்லாம் மக்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். ஜி பிரகாஷ் ரொம்ப நல்ல மனிதர். நல்ல குணம் கொண்டவர். அடுத்தடுத்து வெற்றிகளை அவர் குவிக்க வேண்டும். அவரை வைத்து ஒரு படம் தயாரிக்கிறேன். அந்த படமும் அவருக்கு நல்ல திருப்புமுனையாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதேபோல் சிறிய பட்ஜெட் படங்களை வெளியிட முடியாமல் பல தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

ஜே பேபி படம் குறித்து சொன்னது:

அதை முயற்சி எடுத்து வெளியிடும் சக்தி வேலனுக்கு என்னுடைய நன்றிகள். காரணம், சமீபத்தில் வெளியான ஜே பேபி திரைப்படம் வணிகரீதியாக வெற்றி பெற்ற படமா? என்றால் அதில் சந்தேகம் தான். ஆனால், அந்த படம் எடுத்தது எங்களுக்கு மனநிறைவாக இருந்தது. படத்தைப் பார்த்தவர்கள் பலருமே பாராட்டி இருந்தார்கள், மக்கள் கொண்டாடுகிறார்கள். வணிகரீதியான வெற்றியை விட மக்கள் விரும்பும் எதார்த்தமான படைப்பாக அந்த படம் இருந்தது ஒரு கலைஞனான எனக்கும், வேலை பார்த்தவர்களுக்கும் சந்தோஷம். இது ஒரு புதிய பயணம் தொடங்குவதை உணர முடிகிறது என்று கூறியிருந்தார்.

ஜே பேபி படம்:

மகளிர் தினத்தன்று பெண்மையை போற்றும் வகையில் தாய்மையின் பாசத்தை மையமாக வைத்து வெளியாகி படம் ஜே பேபி. இந்த படத்தை இயக்குனர் சுரேஷ் மாரி இயக்கியிருக்கிறார். பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரோடுக்ஷன் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. இந்தப் படத்தில் ஊர்வசி, அட்டகத்தி தினேஷ், லொள்ளுசபா மாறன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது.

Advertisement