நீலத்துக்கு சபாக்கள் மறுக்கப்படுகிறது. அரசு அதிகாரிகள் மீது பா ரஞ்சித் வேதனை புகார்.

0
431
ranjith
- Advertisement -

தமிழில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இய்குணராக அறிமுகமானவர் இயக்குனர் ரஞ்சித். அந்த திரைப்படம் இளஞ்சர்கள் இயக்குனர் ஒரு ஜாலியான படமாக பார்க்கப்ட்டது. அதன் பின்னர் இவர் கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கி இருந்தார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் ஹிட் அடித்தது. தொடர்ந்து இரண்டு படங்களின் வெற்றியால் தனது மூன்றாவது படத்தில் இவருக்கு ரஜினியை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-

பா ரஞ்சித் ரஜினி கூட்டணி :

கபாலி, காலா என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கி மாஸ் காட்டி வந்தார். இறுதியாக ரஜினியின் காலா படத்தை இயக்கி இருந்த் ரஞ்சித், சமீபத்தில் ஆர்யாவை வைத்து சார்பட்டா படத்தை இயக்கி இருந்தார். அதோடு ரஞ்சித் ஜாதிப் படங்களை மட்டும் தான் எடுப்பார் என்று விமர்சனம் வைத்தவர்களுக்கு இந்த படத்தின் மூலம் பதிலடி கொடுத்தார் ரஞ்சித். தற்போது சியான் விக்ரமை வைத்து தங்கலான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

- Advertisement -

நீலம் ப்ரோடேஷன்ஸ் :

மேலும் இயக்குனராக மட்டுமலல்லாமல் இவர் நீலம் ப்ரோடேஷன் என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதில் மார்கழியில் மக்களிசை கூடை பயிலகம், கேஸ்ட்லாஸ் கனெக்டிவ் போன்ற பல திரைப்படங்களை அவர் நடத்தி வருகிறார். குறிப்பாக அவர் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிகழும் நடக்கும் அடக்குமுறை குறித்தும் ட்விட்டரில் பல பதிவுகளை போட்டும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்த நிறுவனத்தின் சார்பில் கடந்த மாதம் தலித் வரலாற்று விழா, மேடை நாடகம் புத்தக கண்காட்சி என பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

மார்கழியில் மக்களிசை :

இந்த நிலையில் தற்போது நீலம் நிறுவனம் சென்னை சேத்துப்பட்டுவில் உள்ள மார்கழியில் மக்களிசை என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பா.ரஞ்சித் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் போன்றவர்க்ள பங்கேற்றுள்ளனர். இவர்கள் இணைந்த பல நிகழ்ச்சிகளை நடத்தி வரும் நிலையில் இது குறித்து செய்தி ஊடகம் ஒன்றிற்கு பா ரஞ்சித் பேட்டி கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் தாங்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்த அரசு அனுமதி மறுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

-விளம்பரம்-

நிகழ்ச்சி நடத்த அரசு அனுமதி மறுப்பு :

அவர் கூறியதாவது எங்களுடைய நீலம் நிறுவனத்திற்கு பல இடங்களை அனுமதி மறுக்கப்பட்டு நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என தனியார் அரங்குகள் கூறுகின்றனர். அதோடு அரசு சபாக்களில் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. நாங்கள் கலைவாணர் அரங்கில் நிகழ்ச்சி நடத்த ஆசைப்பட்டோம், ஆனால் அங்கு முன்பதிவு செய்யும் அனுமதியை அரசு கொடுக்கவில்லை. மேலும் அதற்காக பல நாட்கள் நடக்கவிட்டனர். இதனால் வேறு அரங்குகளில் நிகழ்ச்சிகளை நடத்துவதாக கூறியிருந்தார் இயக்குனர் பா ரஞ்சித்.

Advertisement