மாறன் முகத்தை கூட காட்டாத அவலம், கதறிய மகள் – ப. ரஞ்சித் உருக்கமான பதிவு.

0
1290
ranjith
- Advertisement -

நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் பல்வேறு பிரபலங்களையும் இந்த கொடிய வைரஸ் விட்டுவைக்கவில்லை.தமிழ் சினிமாவில் சூர்யா, விஷால், அதர்வா, ஆண்ட்ரியா, சரத் குமார், சுந்தர் சி என்று பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமாகினார். அதே போல கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல சினிமா பிரபலங்கள் உயிரிழந்தனர்.

-விளம்பரம்-
Image

சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு நடிகர் பாண்டு, இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா, பாடகர் கோமகன், நடிகர் ஜோக்கர் துளசி ஆகியோர் கொரோனாவால் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.அதே போல நேற்று பிரபல காமெடி நடிகரான நெல்லை சிவா மாரடைப்பு காரணமாக காலமானார். இப்படி ஒரு நிலையில், தற்போது கில்லி பட நடிகர் மாறனும் மரணமடைந்திருப்பது திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் பாருங்க : ரொம்ப Careless-ஆ இருந்தேன் இப்போ கஷ்டப்படுறேன் – கொரோனாவால் பாதிக்கப்ட்ட சென்றாயன் (மனைவி மற்றும் குழந்தையின் நிலை ? )

- Advertisement -

2004-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான கில்லி படத்தில் ஆதிவாசி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான இவர், இதையடுத்து டிஷ்யூம், பட்டாசு, தலைநகரம், வேட்டைக்காரன், கேஜிஎஃப் உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். மேலும் கானா பாடல்களையும், மேடை கச்சேரிகளிலும் பாடி வந்துள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நடிகர் மாறன் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மாறன் இறப்பு குறித்து பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் தனது சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்து வந்த இவரின் மறைவு குறித்து இயக்குனர் பா. ரஞ்சித் பதிவிட்டுள்ள ட்வீட்டில், கடக்க முடியாத துயரம்..எப்போதும் கட்டுகடங்காத அன்பை பொழியும் மாறன் அண்ணாவே, உன் முகத்தை கூட காட்டவில்லை என்று உன் மகள் அழுகிறாள் ணா!! என்னிடம் தேற்றுவதற்கு வார்த்தைகள் இல்லை!! நண்பர்களே பாதுகாப்பாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement