பா ரஞ்சித் – சூர்யா கூட்டணியில் உருவாகும் German படத்தின் கதையும், போஸ்டர்களும் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்கிறார் பா. ரஞ்சித். இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து வட சென்னையை கதைக்களமாக கொண்டு மெட்ராஸ் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.
அதனை தொடர்ந்து இவர் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா போன்ற படங்களை இயக்கி இருந்தார்.
இவ்விரு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சார்பட்டா பரம்பரை படமும் ரசிகர்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்றது. மேலும், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் பல படங்களை தயாரித்தும் இருக்கிறார்.
நட்சத்திரம் நகர்கிறது படம்:
சமீபத்தில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராமன் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக சார்பட்டா பரம்பரை புகழ் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் கலையரசன், அரிகிருஷ்ணன் உட்பட இந்த நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை நீலம் புரோடக்சன் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்து இருக்கிறது. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது.
விக்ரம் 61 படம்:
இந்த படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் சியான் விக்ரம் அவர்களின் 61வது படத்தை இயக்க இருக்கிறார். அதற்கான அதிகாரப்பூர் அறிவிப்புகள் எல்லாம் வெளியாகி இருக்கிறது. இந்த படம் 90 காலகட்டத்தில் கேஜிஎப்பில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் என்றும் ரஞ்சித் கூறி இருந்தார். சமீபத்தில் தான் இந்த படத்தின் பூஜை நடந்தது. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர்கள் நீலம் புரொடக்ஷன் உடன் இணைந்து தயாரிக்கிறார்கள்.
பா.ரஞ்சித்- சூர்யா கூட்டணி:
தற்போது இந்த படத்திற்கான வேலைகள் சென்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில் ரஞ்சித்- சூர்யா கூட்டணியில் உருவாகும் படம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பா. ரஞ்சித்தின் கனவு திரைப்படம் German. விக்ரம் படத்தை முடித்தவுடன் இந்த படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் கதாநாயகனாக நடிகர் சூர்யா நடிக்கிறார். சூர்யாவும் விக்ரம் படத்தை முடித்துவிட்டு வாருங்கள் தொடங்கலாம் என்று கூறியிருக்கிறாராம். மேலும், German படத்தில் நிறைய VFX காட்சிகள் இருக்கும் எனவும் இந்த படம் அதிக பொருட்செலவில் உருவாகும் எனவும் கூறப்படுகிறது.
பா.ரஞ்சித் கொடுத்து இருக்கும் விளக்கம்:
மதுவிற்கு அடிமையான விமான ஓட்டி சூர்யா பெர்முடா முக்கோணத்தின் மூலம் வேறு ஒரு உலகிற்கு தொலைந்து போகிறார். பின் அங்குள்ள மக்கள் அவரை கண்டுபிடித்து அவரை தங்கள் லட்சியத்துக்காக எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பது தான் கதை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இதற்கு பா. ரஞ்சித் கூறியது, ஜெர்மன் படம் குறித்து பரவி வரும் கதை உண்மையல்ல. அது எதிர்காலத்தில் நடக்க இருக்கும் கதை. கதையை சூர்யாவிடம் சொல்லி சொல்லிவிட்டேன். கதையில் சில மாற்றங்கள் செய்ய இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். ஆனால், சூர்யா உடைய ரசிகர்கள் ஜெர்மன் திரைப்படம் குறித்த போஸ்டர்களை ரசிகர்களே வடிவமைத்து சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.