பா ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது படத்தை பார்க்க குழந்தைகளுக்கு தடை – என்ன காரணம் தெரியுமா ?

0
408
Natchathiram Nagargiradhu
- Advertisement -

பா. ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு சென்சார் போர்டு A சர்டிபிகேட் வழங்கி உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்கிறார் பா. ரஞ்சித். இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தான் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து வட சென்னையை கதைக்களமாக கொண்டு மெட்ராஸ் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்

-விளம்பரம்-

இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. அதனை தொடர்ந்து இவர் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா போன்ற படங்களை இயக்கி இருந்தார். இவ்விரு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகி இருந்த படம் சார்பட்டா பரம்பரை இந்த படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ரீலிஸ் ஆகி ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.

- Advertisement -

நட்சத்திரம் நகர்கிறது படம் :-

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்றது. இருந்தாலும் இவ்வளவு அருமையான படத்தை திரையில் பார்க்க முடியவில்லை என ரசிகர்கள் தங்கள் வேதனைகளை தெரிவித்தனர். மேலும், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் பல படங்களை தயாரித்தும் இருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த ரைட்டர் படத்தை இவர் தான் தயாரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து விட்டது.

இந்த முறை புதிய குழுவுடன் களமிறங்கிய பா.ரஞ்சித் :-

இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராமன் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக சார்பட்டா பரம்பரை புகழ் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இவர்களுடன் படத்தில் அசோக் செல்வன் எனப் பலர் நடித்து இருக்கிறார்கள். இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தின் இசையமைப்பாளர் டென்மா இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். ஒளிப்பதிவாளராக கிஷோர் குமார் இந்த படத்தில் பணியாற்றி இருக்கின்றனர். இந்த முறை பா.ரஞ்சித் புதிய குழுவுடன் களமிறங்கி இருப்பதால் இந்த படம் பெரும் எதிர்பார்புடன் ரசிகர் உள்ளனர்.

-விளம்பரம்-

படத்தின் ரிலீஸ் :-

இவர்களுடன் இந்த படத்தில் கலையரசன், அரிகிருஷ்ணன் உட்பட இந்த நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை நீலம் புரோடக்சன் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தில் சாண்டி மாஸ்டர் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் பா ரஞ்சித்தின் மனைவி அனிதா அவர்கள் இந்த படத்தில் நடித்து இருக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 31ம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் நட்சத்திரம் நகர்கிறது படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது.

ஜாதி பற்றி பேசியதால் படத்திற்கு ‘A’ சர்டிவிக்கெட் :-

இப்போது பா. ரஞ்சித்தின் நட்சத்திரம் நகருகிறது படத்திற்கு மிக பெரிய சிக்கல் என்னவென்றால் சென்சார்க்கு சென்ற நட்சத்திர நகர்கிறது படத்தில் ஜாதிகளை பற்றி படத்தில் பேசி இருப்பதால் சென்சார் போர்டு இந்த படத்திற்கு ‘ஏ’ சர்டிபிகேட் வழங்கி இருக்கிற செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது. படம் ரிலீஸ் செய்யப்படும் நாள் பக்கத்தில் நெருங்கிக் கொண்டிருப்பதால் படக் குழுவினர் படத்தின் புரோமோஷன்க்காக கேரளா சென்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளனர். மேலும் சியான் விக்ரம் பா.ரஞ்சித்தின் அடுத்த படத்திற்காக தயாராகி கொண்டிருக்கிறார். இந்த படத்தின் கதைகளம் மிகவும் வித்தியசமாக இருக்குமாம்.

Advertisement