படையப்பா ரீ-ரிலீஸ், இவங்கெல்லாம் இல்லையேன்னு நினைக்கும் போது – தயாரிப்பாளர் தேனப்பன்

0
305
- Advertisement -

படையப்பா ரீ ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் தேனப்பன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாக முக்கிய நடிகர்களின் படங்கள் ரிலிஸ் ஆகி திரையரங்குகளில் மக்கள் கூட்டம் குறைவதால் ஏற்கனவே வெளியாகி ஹிட்டான படங்களை திரையிட்டு வருகின்றனர் திரையரங்க உரிமையாளர்கள். அந்த வகையில் சமீபத்தில் கில்லி படம் 20 ஆண்டுகளை கடந்த நிலையில் திரையரங்குகளில் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

என்னதான் ரீ-ரிலீஸ் படம் என்றாலும் எதோ புது படம் வெளியானது போது திரையரங்குகளில் கூட்டம் கூட்டமாக குவிந்து இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர் விஜய் ரசிகர்கள். சமூக வலைத்தளத்தில் கடந்த கில்லி படம் குறித்த பதிவுகள் வைரலாகி வந்த நிலையில் இந்த படத்தில் நடித்த பல்வேறு பிரபலங்களை பேட்டியும் கொடுத்து இருந்தார்கள். அதோடு கில்லி படம் வெளியாகி மிக பெரிய அளவில் வசூல் செய்து இருக்கிறது.

- Advertisement -

படையப்பா குறித்த தகவல்:

மேலும், கில்லி படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களை ரிலீஸ் செய்ய கோலிவுட் வட்டாரத்தில் முடிவு செய்திருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வசூல் செய்த ரஜினியின் படையப்பா படத்தை ரீ ரீலிஸ் செய்வது குறித்து ரஜினியை சந்தித்து பேசியிருக்கிறார்கள். இந்நிலையில் இது குறித்து படையப்பா படத்தின் இணை தயாரிப்பாளர் தேனப்பன் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார்.

தேனப்பன் பேட்டி:

அதில் அவர், கில்லி படத்தின் ரிலீஸ் முன்னோடியே படையப்பா படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தோம். அதுக்காகத்தான் வேட்டையன் படப்பிடிப்பில் இருந்த ரஜினி சாரை மீட் பண்ணினோம். ரிலீஸ் பண்ணா நன்றாக போகுமா? என்று ரஜினி சார் கேட்டார். சந்தேகமா வேண்டாம் சூப்பரா போகும் என்று சொன்னேன். அதற்கு அவர் சரி பிளான் பண்ணுங்க என்று சொல்லிவிட்டார். ரஜினி சார் எப்பவுமே ஒரே மாதிரி தான். ஆரம்பத்தில் எப்படி இருந்தாரோ இப்பவும் அப்படித்தான் எளிமையோடு இருக்கிறார். அவரிடம் பிடித்த விஷயமே எனக்கு அந்த எளிமை தான். அவர் எப்போதுமே மாறாதவர்.

-விளம்பரம்-

ரஜினி குறித்து சொன்னது:

மனசும் அதே போல் தான் என்றுமே மாறாது. யார் வந்தாலுமே எழுந்து நின்று வரவேற்று உபசரிப்பார். இது மாதிரி நிறைய விஷயங்களை அவரிடம் கற்றுக் கொள்ளலாம். அந்த எளிமையினால் தான் 40 வருடங்களுக்கு மேல் அவர் சூப்பர் ஸ்டாராக தமிழ் சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். நான் படையப்பா ரீ ரிலீஸ் குறித்து அவரிடம் பேச போனபோது ரொம்ப எளிமையாக பேசி பழகினார். அந்த சந்திப்பின் போது நாங்கள் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டோம். படையப்பா முதலில் ரிலீசான போது அதற்கு முன்னாடி ஹிட் அடித்த படங்களின் வசூலை எல்லாம் பிரேக் செய்து விட்டது.

படையப்பா குறித்து சொன்னது:

அதற்கு காரணம் ரஜினி சாரோட நடிப்பும், ஸ்டைலும், கே எஸ் ரவிக்குமார் சாரோட இயக்கம் தான். தற்போது படையப்பாவின் ரிலீசை 2கே கிட்ஸ் கொண்டாடுவார்கள். இதில் ஒரே ஒரு வருத்தம் படையப்பா படத்தில் நடித்த சிவாஜி, மணிவண்ணன், சௌந்தர்யா யாரும் இப்போது உயிரோடு இல்லை. கண்டிப்பாக படையப்பா படம் நல்ல கலெக்சன் கொடுக்கும். கில்லி படத்தைவிட பெருசாக கொடுக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. சவுண்ட் பிக்சர்ஸ், இப்ப இருக்கிற டெக்னாலஜிக்கு ஏற்ற மாதிரி டிஜிட்டல் லைஃப் பண்ற வேலைகள் போய்க் கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு மாதத்தில் உலகம் முழுக்க படையப்பா ரிலீஸ் பண்ண போகிறோம் என்று கூறியிருக்கிறார்

Advertisement