நல்லா வந்து இருக்க வேண்டியன், அந்த பழக்கத்தால் இப்போ புற்றுநோய் வந்து சாப்டா கூட முடியல – படிக்காதவன் பட நடிகரின் பரிதாப நிலை.

0
472
paikadhavan
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் நடித்திருந்தாலும் பலர் தற்போது எப்படி இருக்கிறார்கள் என்று கூட அவர்களுடன் நடித்தவர்களுக்கு தெரியவில்லை. அந்த அளவிற்கு கொரோனாவிற்கு பிறகு சினிமா துறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அப்படி கொரோனவினாலும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் தற்போது சென்னை கோயம்பேடு தெருவில் வாழ்ந்து வரும் நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது.

-விளம்பரம்-

அந்த நடிகர் தான் பிரபு இவர் 100க்கும் மேற்பட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இவரை தனுஷ் நடித்த படிக்காதவன் படத்தின் பார்த்திருக்கலாம். அந்த படத்தில் தனுஷ் தங்கையை பெண் பாக்க வரும் மாப்பிள்ளையாக ஒரு சிறிய காட்சியில் வந்திருப்பார். ஆனால் தற்போது தெருவில் வசித்து வரும் நிலைமைக்கு உள்ளக்கிய அவர் பழனி என்ற சக நடிகரின் உதவியால் இல்லத்தில் சேர்ந்திருக்கிறார். இப்படி பட்ட நிலையில் தான் பிரபல ஊடகம் ஓன்று அவரை சமீபத்தில் பேட்டி எடுத்திருந்தது.

- Advertisement -

தனக்கு வாயில் புற்றுநோய் உள்ளதாகவ கூறிய அவர் தான் எப்படி இந்த நிலைமைக்கு வந்தேன் என்பதனை கூறினார். அவர் கூறியதாவது ” எனக்கு புற்றுநோய் இருக்கிறது உதவி செய்யுங்கள் என்று சினிமா சங்கத்தில் கேட்பது சங்கடமாக இருந்தது. பின்னர் நன்பர் பழனி அவர்களை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் எதிர்த்தமாக பார்த்தேன். அவர் என்னை பார்த்தவுடன் அடையாளம் தெரியவில்லை, நான் கடந்த காலங்களில் முற்றிலும் வேறுமாதிரியாக இருந்தேன். ஆனால் தற்போது இந்த நிலைமையில் இருப்பதினால் அவருக்கு அடையாளம் தெரியவில்லை. என் மீது அவருக்கு அக்கறை இருந்ததினால் என்னை இந்த இல்லத்தில் சேர்ந்தார் என தெரிவித்தார்.

மேலும் தனக்கு கடந்த 6 மாதங்களாக புற்றுநோய் இருப்பதாகவும் முதலில் சிறிய புண் போன்றுதான் இருந்தது. ஆனால் சில நாட்களில் பெரிதாகி கொண்டே சென்று அதிகமாக வாந்தி ஏற்பட ஆரம்பித்து. பின்னர் தான் மருத்துவரிடம் சென்று பார்க்கும் போது வாயில் புற்றுநோய் என கூறினார்கள். காப்பீடு திட்டத்திற்கு ஆதார் கார்டு, ரேஷன் கார்டு தேவை என்றார்கள். ஆதார் கார்டு இல்லை, காப்பீடு திட்டமும் இல்லாததினால் அப்பிரேஷன் செய்ய முடியவில்லை.

-விளம்பரம்-

என்னால் முன்னர் போன்று வேலை செய்ய முடியவில்லை, சாப்பிட கூட முடியவில்லை என்று கூறினார். காரமாக எதுவும் சாப்பிட முடியாது, சூடாக எதுவும் குடிக்க முடியாது. இந்த புற்றுநோய் எனக்கு புகையிலை பாக்கு போன்றவற்றை உபயோக படுத்தியத்தினால் வந்தது. எல்லாரும் பயன்படுத்துகின்றனர் என்று நானும் உபயோகித்தேன் ஆனால் அதுதான் இந்த புற்று நோய்க்கு காரணமாக ஆகிவிட்டது என கூறினார்.

என்னுடைய தாய் தந்தை மறைந்து விட்டனர், எனக்கு 2 அண்ணன்கள் இருக்கின்றனர் ஆனால் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை, திருமணமும் இல்லை என்று கூறினார். பணம் எதுவும் இல்லை கடந்த 5 மாதமாக கோயம்பேட்டில் தான் இருந்து வருகிறேன். கடைசியாக விஷால் நடித்த படத்தில் நடித்திருந்தேன். சாப்பாட்டிற்கு மற்றவர்கள் தருவதை வாங்கி சாப்பிட்டு வருகிறேன் எனவும் அம்மா உணவாதில் 3 வேலை தயிர் சாதம் போடுவார்கள் அதனை சாப்பிட்டு வருகிறேன் என்று கூறினார்.

எனக்கு பல கனவுகள் இருந்தன நண்பர்களுடன் சுற்றி பணத்தை இழந்து இப்போது இந்த நிலைமைக்கு வந்துளேன். ஆனால் இப்போது எந்த நன்பரும் உதவ வரவில்லை. நான் இங்கே வருவதை பாரத்தால் அவர்கள் சுற்றி சென்று விடுவார்கள். அவ்வப்போது பாரத்தால் 10 ரூ 20ரூ கொடுத்து அம்மா உணவகத்தில் தயிர் சாதம் சாப்பிடுங்கள் என்று கூறுவார்கள். நான் அவர்களுக்கு ஆயிரம் இரண்டாயிரம் என செலவு செய்தேன். ஆனால், என்னுடைய நிலைமை இப்போது இப்படி இருக்கிறது.

என்னால் சாப்பிட முடியவில்லை அது மட்டும் முடிந்தால் எது கிடைத்தாலும் சாப்பிட்டு விட்டு வேலைக்கு சென்று விடுவேன் என்று கூறினார். சினிமா துறையில் பல பேர் என்னுடைய நண்பர்கள் தான், கார்த்திக், விஜய் சேதுபதி, அஜித், சந்தானம் போன்றவர்கள் மிக நெருக்கம். ஆனால் நான் இப்படி இருப்பது அவர்களுக்கு தெரியாது, நான் சென்று பார்க்கவும் இல்லை. முன்னரெல்லாம் படப்பிடிப்பின் போது சென்று பார்ப்போம், பேசுவோம், உணவு அருந்துவோம் ஆனால் இப்போது அவர்களை பார்க்க கூட முடியவில்லை. மேலும் யாரும் புகையிலை, பாக்கு போன்றவற்ற உபயோகிக்க வேண்டாம் என்றும், மது அருந்த வேண்டாம் என்றும் கூறினார். மேலும் அப்படி உபயோகப்படுத்தினால் இப்போதே விட்டுவிடுங்கள் இல்லை என்றால் என் நிலைமை தான் உங்களுக்கும் என்றும் கூறினார்.

Advertisement