விக்னேஷ்- சௌந்தர்யா பகல் நிலவு சீரியலில் இருந்து வெளியேறிய காரணம் இது தான்..!

0
1539
pagal-nilavu
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் ஒரு சில சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுகிறது. அந்த வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பாகத் தொடங்கிய `பகல் நிலவு’ சீரியல் இளசுகள் மத்தியில் படு பிரபலமடைந்தது.

-விளம்பரம்-

700-வது எபிசோடை நெருங்கிக் கொண்டிருக்கிற வேளையில், கடந்த 6 மாதங்களுக்கு முன் இந்த தொடரில் இருந்து அன்வர் மற்றும் சமீரா ஜோடி வெளியேறினார். அன்வர் கார்த்திக் – சௌந்தர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் குறைந்ததாகவும், அன்வர் கதையில் குறுக்கிட்டு டாமினேட் செய்ததே அதற்குக் காரணம் என்றும் பேசப்பட்டது.

இதையும் படியுங்க : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை..!காரணம் இது தான்..!

- Advertisement -

அன்வரும் சமீராவும். `குரூப் பாலிடிக்ஸ்’ என அன்வர் தெரிவித்திருந்த வார்த்தைக்கு, சௌந்தர்யா உள்ளிட்ட சக நடிகர், நடிகைகள் உடனே கண்டனமும் தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில், தற்போது விக்னேஷ் – சௌந்தர்யா ஜோடியும் சீரியலில் இல்லை.

இந்நிலையில் சமீபத்தில் இந்த தொடரில் இருந்து வெளியேறிய சௌந்தர்யா கூறுகையில், அன்வர் – சமீரா வெளியேறினது குறித்து நான் எதுவும் கருத்துச் சொல்ல விரும்பலை. அது அவங்க இஷ்டம். கதைல அடிக்கடி மாற்றம் செஞ்சது எனக்கும் விக்னேஷுக்கும் பிடிக்கல அதனால, 4 மாசத்துக்கு முன்னாடியே நானும், விக்னேஷ் கார்த்திக்கும் சேர்ந்து பேசி ஒரு முடிவெடுத்து வெளியேறிட்டோம் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement