தளபதி 64 படத்தில் கமிட் ஆன ‘பகல் நிலவு’ சீரியல் நடிகை. குஷியில் ரசிகர்கள்.

0
14800
thalapthy64
- Advertisement -

தமிழ் சினிமா திரை உலகில் வசூல் மன்னனாக திகழ்பவர் தளபதி விஜய். மேலும்,அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பிகில் படம் உலகம் முழுவதும் மாஸ் காட்டி வருகிறது. மேலும், “பிகில்” படம் தீபாவளி முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானதை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் திருவிழா போன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறார்கள். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் நடித்து உள்ளார். இவர்களோடு விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், யோகிபாபு ஆகிய பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து உள்ளது. இது அனைவருக்கும் தெரிந்ததே.
இதனைத்தொடர்ந்து தளபதி விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 64’ படம் குறித்த தகவல்கள் இணையங்களில் வெளிவந்துள்ளது.

-விளம்பரம்-
Image result for soundarya nandakumar"

- Advertisement -

அதோடு இந்த படத்தை மாநகரம் படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்குகிறார். இந்த படத்தில் சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிடா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், சேத்தன், அழகம் பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி உள்ளிட்ட பல முக்கியமான நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும், இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரிக்க உள்ளார்கள். மேலும், இந்த தளபதி 64 படத்திற்கு பெயர் இன்னும் வைக்கவில்லை. விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும், தளபதி 64 படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு மூன்று வாரங்களாக நடைபெற்றது. அதிலும் சமீபத்தில் தான் புதுடெல்லியில் இந்த படத்தின் படப்பிடிப்பு 20 நாட்களாக நடந்து முடிந்தது.

இதையும் பாருங்க : இளம் நடிகையாக இருந்த போது அஞ்சலி இப்படி ஒரு ஆடையில் நடத்திய போட்டோஷூட்.

தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது என்ற தகவலும் வெளிவந்துள்ளது. இதில் விஜய், மாளவிகா மோகனன் மற்றும் வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பலர் பங்குபெற்றனர். சமூக வலைத்தளங்களில் ஒன்றான யூடியூபில் ஒளிபரப்பாகும் ‘ஆஹா கல்யாணம்’ என்ற வெப் சீரிஸ் மூலம் பிரபலமானவர் (பவி டிச்சர்) நடிகை பிரிகிதா. மேலும்,நடிகை பிரகிதா தளபதி 64 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதோடு இந்த படம் 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு திரைக்கு வரும் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தின் ஒட்டு மொத்த படப்பிடிப்பையும் வருகிற ஜனவரி மாதத்தில் முடித்து விடுவதாகவும் படக்குழு அறிவித்திருந்தார்கள். இவர்களுடன் பாடகி சௌந்தர்யா இணைந்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி மூலம் சௌந்தர்யா பிரபலமானவர். அதோடு சௌந்தர்யா அவர்கள் தளபதி 64 நடிக்க உள்ளார் என்ற தகவல் வந்துள்ளது.இவர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான ‘பகல் நிலவு’ தொடரிலும் நடித்துள்ளார். மேலும், பிக் பாஸ் சீசன் 3 இன் டைட்டில் வின்னர் முகேன் ராவ் பாடிய ‘சத்தியமா நான் சொல்லுரேண்டி’ என்ற பாடலை பாடி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் விக்னேஷ் கார்த்திக் இயக்கிய ‘Yours Shamefully’ என்ற குறும்படத்தின் மூலம் மக்களிடையே பரவலாக பேசப்பட்டார்.

Advertisement