‘பள்ளு படமா பாத்துக்கோ’ படத்தின் பிரஸ் மீட்டில் தினேஷை வெளுத்தி வாங்கிய செய்தியாளர்கள்.

0
48980
Dinesh

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான சினிமாவின் இரட்டை மொழி வசனத்தில், இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயகுமார் இயக்கத்தில் வெளியான “இருட்டு அறையில் முரட்டு குத்து ” படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. அதே அளவிற்கு இந்த படத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்பும், கண்டனமும் இன்னும் வலுத்து வருகிறது. இளசுகள் மத்தியில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றாலும், இந்த கால சமூகத்திற்கு ஒரு கேவலமான உதாரணமாக தான் இருக்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்துவந்தனர் .

இந்நிலையில் இந்த படத்தை போலவே தமிழில் மீண்டும் ஒரு படம் விரைவில் வெளியாக இருக்கிறது. யூடூப்பில் பிரபலமடைந்த டெம்பில் மங்கீஸ் இயக்குனர் விஜய் வரதராஜன் “பள்ளு படாம பாத்துக்கோ” என்ற படத்தை இயக்கி இருக்கிறார் . அட்டகத்தி தினேஷ் நடிக்கும் இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி அவருக்கு ஜோடியா நடித்துள்ளனர். படத்தின் பணிகள் கடந்த 2018 ஆம் ஆண்டே துவங்கிய நிலையில் தற்போது தான் இந்த படம் நிறைவடைந்துள்ளது. தற்போது இந்த படம் ஒருவழியாக வரும் மார்ச் 13 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

- Advertisement -

இதையும் பாருங்க : கை கால்கள் செயலிழந்த நிலையில் நானும் ரௌடி தான் நடிகர். பண உதவி கேட்ட நடிகர்.

சமீபத்தில் இந்த படத்தின் பிரெஸ் மீட் ஒன்று நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் தினேஷிடம், பத்திரிகையளர்கள் சர மாறியாக கேள்விகளை கேட்டிருந்தனர். அப்போது இந்த படத்தின் காட்சி அமைப்புகள், சித்தரிப்புகள், வசனங்களை பார்க்கும் போது இந்த படத்தை பொண்டாடியுடன் பார்க்க முடியுமா? ஒருவேளை உங்களுக்கு பட வாய்ப்புகள் இல்லை என்று இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டீர்களா என்று கேள்வி எழுப்ப பட்டது.அதற்கு பதிலளித்த தினேஷ் அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தது ஆனால் என்னுடைய படங்களை நான்தான் தேர்வு செய்கிறேன் இந்த படத்தில் இருக்கும் கருத்து கண்டிப்பாக சொல்லப்பட வேண்டிய ஒரு விஷயம்.

-விளம்பரம்-
அட்டகத்தி தினேஷை வெளுத்து வாங்கிய பத்திரிகையாளர்கள்!

அட்டகத்தி தினேஷை வெளுத்து வாங்கிய பத்திரிகையாளர்கள்! பள்ளு படமா பாத்துக்கோ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அட்டகத்தி தினேஷ் மற்றும் விஜய் வரதராஜ்#AttakathiDinesh #VijayVaradharaj #PalluPadamaPaathuka

Nakkheeran Studio ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಶನಿವಾರ, ಫೆಬ್ರವರಿ 29, 2020

மேலும், இந்த படத்தின் தலைப்பை மட்டும் மாற்றி கொள்ளலாம் என்று நான் கேட்டிருந்தேன் ஆனால் இயக்குனர் சம்மதிக்கவில்லை என்னால் போராட முடியாது என்னால் ரோட்டில் சென்று கலாட்டா செய்ய முடியாது. ஆனால். என்னால் நடிக்க முடியும் அது எனக்கு கிடைத்த வரம் அதனால் நான் நடிக்கிறேன். ஆனால், சினிமாவை விட வீட்டில் வரும் செய்திகளை குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கிறோம் அது இதைவிட பயங்கரமாக இருக்கிறது என்று கூறினார். இதனால் கடுப்பான செய்தியாளர்கள் தினேஷ் லெப்ட் ரைட் வாங்கிவிட்டார்கள் இதனால் தினேஷ் என்ன பேசுவது என்று தெரியாமல் விழிபிதுங்கி நின்றார்

Advertisement