பார்ட் 1ல வந்த அந்த கேரக்டர்ல தான நீங்க நடிக்கிறீங்கன்னு கேட்கிறார்கள் – PS2 ரகசியத்தை சொன்ன சீரியல் நடிகை.

0
657
pandianStores
- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 வில் நடிக்கும் கதாபாத்திரம் குறித்து நடிகை ஹாசினி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் வகுத்து வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், சரவணன், தீபிகா என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

அதோடு இந்த சீரியல் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிறைவடையும் முன்னரே இரண்டாம் சீசனுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது தான் இரண்டாவது பாகத்தின் டைட்டில். இதற்கு முன்பு அண்ணன் தம்பிகள் கதையை மையமாக வைத்து எடுத்திருந்தார்கள்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

தற்போது இரண்டாவது சீசனில் அப்பா- மகன்களுக்கு இடையேயான உறவை மையமாக வைத்து கதையை எடுக்கிறார்கள். மேலும், முதல் சீசனில் அண்ணனாக நடித்த ஸ்டாலின் தற்போது அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்டாலினுக்கு மனைவியாக நிரோஷா நடிக்கிறார். மேலும் இவர்களுடைய மகன்களாக விஜே கதிர், வசந்த், ஆகாஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். தற்போது இந்த இரண்டாவது சீசன் உடைய ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. இந்த மாத இறுதியிலேயே இந்த இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது.

ஹாசினி அளித்த பேட்டி:

மேலும், இந்த சீரியலில் ஹாசினி என்கிற விசாலினி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இது தொடர்பாக அவர் பேட்டியில் கூறியிருப்பது, இதற்கு முன்பு நான் நிறைய சீரியல் செய்திருக்கிறேன். ஜீ தமிழ் தவமாய் தவமிருந்து சீரியல் எனக்கு என்று ஒரு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. அந்த தொடர் முடியும்போது பலரும் உங்களை ரொம்ப மிஸ் பண்றேன். அடுத்து என்ன சீரியல் பண்ண போறீங்க என்றெல்லாம் கேட்டிருந்தார்கள். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 ப்ரோமோ வந்ததும் பலரும் சந்தோஷப்பட்டு வாழ்த்தி நிறைய மெசேஜ் அனுப்பி இருந்தார்கள்.

-விளம்பரம்-

சீரியல் குறித்து சொன்னது:

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் என்று சொன்னதும் எனக்கு பயங்கர ஹாப்பி ஆகிவிட்டது. அவர்கள் சொன்னதுமே நான் பண்றேன் என்று சொல்லிவிட்டேன். என்ன கேரக்டர்? என்று நான் யோசிக்கவே இல்லை. பிறகு என்னுடைய கேரக்டர் பற்றி சொன்னதும் எனக்கு இன்னும் சந்தோஷமாகிவிட்டது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 1 தொடர்ச்சி இந்த சீசன் 2 கிடையாது. சரியாக சொல்லணும் என்றால் பாண்டியன் ஸ்டோர்ஸ் 1க்கும் 2க்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இது மொத்தமாகவே வேற கதை. நிறைய பேர் என்னிடம் பாண்டியன் ஸ்டோர்ஸ் வர கயல் கேரக்டர் தானே நீங்க என்று கேட்கிறார்கள்.

மூத்த பெண்ணாக நடிக்கிறேன் :

அதற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த தொடரில் பாண்டியனுக்கு மூன்று பசங்க, ரெண்டு பொண்ணுங்க. நான் மூத்த பொண்ணா நடிக்கிறேன். இந்த சீரியலில் நிறைய பேர் நடிக்கிறார்கள். அதை சீரியலில் வரும் போது நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். மூன்று தம்பிகளுக்கு ஸ்ட்ரிட்டான அப்பா, பொண்ணுங்க கிட்ட பாசமான அப்பா. இந்த சீரியலில் என்னுடைய காஸ்டியூம், ஜுவல்லரி கலெக்சனில் கொஞ்சம் கவனம் செலுத்துகிறேன்.

அதே மாதிரி காரைக்குடி பக்கம் நடக்கிற மாதிரியான கதை என்பதால் என்னென்ன வார்த்தைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கவனம் செலுத்தி வருகிறேன். எனக்கு சௌமியா தான் டப்பிங் பேசுகிறார். இந்த கேரக்டருக்காக ஒவ்வொன்னும் பார்த்து பார்த்து பண்ணுகிறேன். இந்த கதாபாத்திரமும் நிச்சயம் மக்கள் மனதில் பதியும் என்று நம்புகிறேன். இந்த தொடரில் எனக்கு அழகான தமிழ் பெயர் வைத்திருக்கிறார்கள். அது என்ன என்று சீரியல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த கதாபாத்திரம் அப்பா மேல பாசமாக இருக்கிற ஒரு பொண்ணு எப்பவும் எதுக்காகவும் தம்பியையும் குடும்பத்தையும் விட்டுக் கொடுக்காத பொண்ணு என்று பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement