நாட்டிய பேரொளி ‘பத்மினி’ பொத்தி பொத்தி வளர்த்த ஒரே மகன் – அட அவரும் ஒரு நடிகர் தானா?

0
1809
- Advertisement -

மறைந்த நடிகை பத்மினியின் மகன் குறித்து பலரும் அறிந்திடாத தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உலக நாட்டிய பேரொளி என்று பெயரெடுத்த பத்மினியை யாராலும் மறக்க முடியாது.
ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக கொடிகட்டி பறந்திருந்தவர்பத்மினி. இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல மொழிகளிலும் நடித்து புகழ்பெற்றிருந்தவர்.

-விளம்பரம்-

மேலும், இவர் நடிகை மட்டும் இல்லாமல் புகழ்பெற்ற நாட்டிய மங்கையும் ஆவார். இவருடைய சகோதரிகள் லலிதா, ராகினியும் புகழ்பெற்ற நாட்டிய நடிகைகள் தான். இவர்களை திருவாங்கூர் சகோதரிகள் என்று தான் அழைப்பார்கள். பத்மினி தன்னுடைய நான்கு வயதிலிருந்தே நாட்டியமாட பயின்றார். இவர் கதகளி, பரதம், மணிப்புரி ஆகிய மூன்று நடனங்களையும் முறையாக பயிற்சி பெற்றிருந்தார். பின் தன்னுடைய 10 வயதிலேயே பத்மினி அரங்கேறிநாட்டிய திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.

- Advertisement -

பத்மினி குறித்த தகவல்:

கிட்டத்தட்ட 64 ஆண்டுகள் தன்னுடைய நாட்டிய உலகில் புகழ்பெற்று நாட்டிய பேரொளி என்று அழைக்கப்பட்டவர் பத்மினி. மேலும், இவர் குச்சிபுடி, மோகினி ஆட்டத்திலும் திறமை பெற்றவர். இவர் தன்னுடைய 17 வயதில் தான் சினிமாவுலகில் நுழைந்தார். இயக்குனர் உதயசங்கர் இயக்கத்தில் வந்த கல்பனா என்ற இந்தி மொழி படத்தின் மூலம் தான் இவர் நடிகையானார். அதற்கு பிறகு இவர் பல மொழி படங்களில் நடித்திருந்தார். வாழ்க்கை என்ற படத்தின் மூலம் தான் பத்மினி தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார்.

பத்மினி திரைப்பயணம்:

அதனை தொடர்ந்து இவர் தமிழில் சிவாஜி கணேசன், எம்ஜிஆர், ஜெமினி கணேசன் என பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்திருக்கிறார். இதுவரை இவர் 250 படங்களுக்கு மேல் நடித்திருந்தார். குறிப்பாக சிவாஜி உடன் மட்டும் 59 படங்களில் நடித்திருந்தார். அதிலும் தில்லானா மோகனாம்பாள் படத்தில் இவருடைய நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இன்றும் அந்த படத்தில் இடம் பெற்ற மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.

-விளம்பரம்-

பத்மினி குடும்பம்:

இவருடைய நடிப்பு திறமைக்கும் நாட்டிய திறமைக்கும் வாங்காத விருதுகளே இல்லை. இவர் கடைசியாக தமிழில் வெளிவந்த பூவே பூச்சூடவா என்ற படத்தில் நடிகை நதியாவின் பாட்டி வேடத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு இவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. நடிகை பத்மினியின் அண்ணன் மகள் தான் பிரபல நடிகை சோபனா. அதேபோல் பத்மினியின் கணவர் ராமச்சந்திரனின் அண்ணன்களில் ஒருவருடைய மகன் தான் பிரபல நடிகர் வினித் என்பது குறிப்பிடத்தக்கது. பத்மினி அவர்கள் மருத்துவர் ராமச்சந்திரனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

பத்மினி மகன்

திருமணத்திற்கு பிறகும் இவர் தன்னுடைய குடும்பம் குழந்தைகள் வளர்ப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். அங்கேயும் அவர் நடன பள்ளி ஆரம்பித்து முறைபடியாக பரதநாட்டிய கலையை கற்றுத் தந்து வந்தார். நடிகை பத்மினி அவர்கள் 2006 ஆம் ஆண்டு மாரடைப்பால் சென்னையில் இறந்து விட்டார். இந்த நிலையில் இவர்களுக்கு ஒரே ஒரு மகன் பிறந்தார். அவருடைய பெயர் பிரேம் ஆனந்த். இவர் மலையாளத்தில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்த Udayam Padinjaru என்ற படத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு இவரும் எந்த படத்தில் நடிக்கவில்லை. இவர் தன்னுடைய தாயைப் போல சினிமாவில் பெரிய அளவில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருந்தாலும் இவரால் நீடித்து இருக்கவில்லை. இவர் உலகப் புகழ்பெற்ற டைம் ஆங்கில பத்திரிக்கையில் பத்திரிகையாளராகவும், புகைப்பட கலைஞராகவும் வேலை பார்த்திருக்கிறார். தற்போது மறைந்த நடிகை பத்மினியின் குடும்ப புகைப்படமும் அவருடைய மகனின் புகைப்படம் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement