விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கோவிலில் சரவணன்- அஞ்சலி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். சரவணன் பேசினாலும் அஞ்சலி பெரிதாக கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்தார். அப்போது அந்த பக்கம் வந்த பாக்கியம், சரவணன்-அஞ்சலி இருவரும் பேசுவதை பார்த்து கொந்தளித்தா. பின் பாக்கியம், இவளுக்காக தான் என் மகளை வேண்டாம் என்று ஒதுக்கி வைத்தீர்களா? அவள் கர்ப்பமாக இருக்கிறார் என்று தெரிந்தும் என் மகளை ஏற்றுக்கொள்ள உங்களுக்கு மனது இல்லை. உனக்கு வெட்கமாக இல்லையா? உனக்கு ஊரில் வேறு ஆண்பளை கிடைக்கவில்லையா? என்று அஞ்சலியும் சரவணனையும் ரொம்ப மோசமாக பேசினார்.

அவமானம் தாங்க முடியாமல் அஞ்சலி அங்கு இருந்து சென்று வந்தார். இன்னொரு பக்கம் செந்தில் காலையில் எழுந்து மீனாவிற்கு உதவி செய்வதாக சொல்லிவிட்டு தூங்கி கொண்டு இருந்தார். மீனா வேலைக்கு நேரமாகிறது என்று சமைத்துவிட்டு கிளம்பி விட்டார். பின் செந்தில் வேலைக்கு நேரம் ஆகிவிட்டது என்று பதறி அடித்துக் கொண்டு ரெடியானார். அதற்குப்பின் பாண்டியன்- அரசி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது வந்து கார்த்திகேயன் தன்னுடைய பொருள்களை எல்லாம் கடையில் வைக்க பார்த்தார். பாண்டியன், உனக்கு பொருள் வியாபாரமாக வேண்டும் என்றால் நீயே தனியாக கடைப்பிடி.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
எதற்கு என் கடையில் வைக்கிறார் என்றெல்லாம் சொல்லி கார்த்திகேயனை அங்கிருந்து அனுப்பி விட்டார். பின் அரசி தனியாக நடந்து வந்திருப்பதை பார்த்து கார்த்திகேயன் உங்களுக்கு எந்த பொருள் வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள். நான் வீட்டுக்கு கொண்டு வந்து தருகிறேன். அந்த கடையில் வாங்க வேண்டாம் என்றெல்லாம் சொன்னார். அரசி, தன்னுடைய கடை தான் என்று சொல்லாமல் அமைதியாக இருந்தார். பின் எப்படியோ ஏதேதோ சொல்லி அரசி போன் நம்பரையும் கார்த்திகேயன் வாங்கிக் கொண்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அஞ்சலியின் வீட்டிற்கு சென்ற பாக்கியம் ரொம்ப மோசமாக அஞ்சலியையும் அவருடைய குடும்பத்தையும் பேசுகிறார். அக்கம் பக்கத்தில் எல்லோருமே அஞ்சலியின் குடும்பத்தை குடும்பத்தை தவறாக புரிந்து கொள்கிறார்கள். அஞ்சலி சொல்ல வருவதை கூட கேட்காமல் பாக்கியம் ரொம்பவே தவறாக பேசி விடுகிறார். இதையெல்லாம் கேட்ட அஞ்சலியின் அப்பா அம்மா வருத்தப்படுகிறார்கள். பின் அஞ்சலி, நான் கோயிலில் சரவணனை எதர்ச்சியாக பார்த்தேன். ஆனால், அவர்கள் தான் தவறாக புரிந்து கொண்டு பேசுகிறார்கள் என்று அழுகிறார்.

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் சரவணன், பாண்டியன் இருவரும் கடையில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது அங்கு வந்து அஞ்சலியின் அப்பா, பாண்டியனிடம் பாக்கியம் வீட்டிற்கு வந்ததையும், சரவணன்-அஞ்சலி இருவரும் சந்திப்பதை பற்றி ரொம்ப மோசமாக பேசிய விஷயத்தை எல்லாம் சொல்லி வருத்தப்படுகிறார். இனிமேல் உங்கள் பையன் என் மகளை சந்திக்கக்கூடாது என்றெல்லாம் செல்கிறார். இதை கேட்டு ஆத்திரமடைந்த சரவணன் பைக்கை எடுத்துக் கொண்டு பாக்கியத்தின் வீட்டிற்கு கிளம்புகிறார். பாண்டியன் தடுத்துமே சரவணன் கேட்கவில்லை.






