விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாண்டியன் வீட்டிற்கு பழனி- சுகன்யா இருவரும் வந்தார்கள். அப்போது பழனிவேல், சுகன்யா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொன்னார். இதனால் மொத்த குடும்பமும் சந்தோஷப்படுகிறது. எல்லோரும் ஸ்வீட் கொடுத்து பழனி, சுகன்யா இருவருக்கும் வாழ்த்துக்களை சொன்னார்கள். பின் இதைப் பற்றி செந்தில், மீனாவிற்கும் போன் பண்ணி தகவலை சொல்லி விட்டார்கள். பின் பழனியை தனியாக சந்தித்த கதிர், இந்த நேரத்தில் அப்பத்தா உங்களுடன் இருந்தால் நன்றாக இருக்கும். உங்கள் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு செல்லுங்கள் என்றார்.

பழனி, முதலில் தயங்கினாலும் பதில் சொல்வதை ஒத்துக்கொண்டார். அதற்குப்பின் பாண்டியன், வீட்டில் எல்லோருமே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். தன்னுடைய அம்மாவிடம் பழனி, நீ என்னுடன் வந்துவிடுமா? சுகன்யாவிற்கு ஒத்தாசையாக இருக்கும் என்றார். உடனே கோபத்தில் காந்திமதி, என்னை அவமானப்படுத்திய உன் அண்ணன்கள் வந்து கூப்பிடட்டும் நான் வருகிறேன். அதுவரைக்கும் நான் அந்த வீட்டு பக்கம் வரமாட்டேன் என்றார். பழனி, எவ்வளவு சொல்லியுமே காந்திமதி கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் பாண்டியன் - கோமதி இருவரும் பழனியை திட்டி காந்திமதியை அனுப்ப முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பாண்டியன் வீட்டில் எல்லோருமே அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். அப்போது காந்திமதி, ரொம்ப வெட்கையாக இருக்கிறது. அங்கு ஏசியிலே இருந்து பழகிவிட்டேன் என்றார். இதுதான் சந்தர்ப்பம் என்று கதிர், உங்களுக்கு இங்கு உங்களுக்கு வசதி பத்தவில்லை என்றால் உங்கள் வீட்டிற்க்கே போங்க என்றார். இதைக் கேட்டு பாண்டியன்-கோமதி இருவரும் ஷாக் ஆனார்கள். ராஜி, கதிரை திட்டுகிறார். இருந்தாலும் விடாமல் கதிர், காந்திமதியை வீட்டை விட்டுப் போக சொன்னார். காந்திமதியுமே கதிர் சொன்ன வார்த்தையால் ரொம்பவே மனமுடைந்து விட்டார்.

சீரியல் ட்ராக்:
கதிர், காந்திமதி இடம் பிரச்சனை செய்வது போலவே பேசிக் கொண்டிருந்தார். கதிரின் குரலை கேட்டு முத்துவேல் குடும்பத்தில் உள்ள எல்லோருமே வெளியே வந்துவிட்டார்கள். காந்திமதிக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போது சக்திவேல், தான் செய்த தவறுக்கு காந்திமதி இடம் மன்னிப்பு கேட்டு வீட்டிற்கு அழைத்தார். பாண்டியன், கோமதி வேண்டாம் என்று தடுத்தார்கள். ஒரு கட்டத்தில் சக்திவேல் காந்திமதியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். ஒரு வழியாக காந்திமதி தன்னுடைய மகன்கள் வீட்டிற்கு செல்லவே முடிவெடுத்தார். இதை பார்த்து முத்துவேலுக்கு சந்தோசமாக இருக்கிறது. கோமதி, கதிரை பார்த்து பயங்கரமாக கோபப்பட்டார்.
https://www.youtube.com/watch?v=JzMDOI4Dmm8
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கோர்ட்டில் விவாகரத்து கேஸ் நடக்கிறது. சரவணன், என்னால் சேர்ந்து வாழ முடியாது. விவாகரத்து வேண்டும் என்று சொல்கிறார். மயில், எனக்கு விவாகரத்து வேண்டும் என்று சொல்கிறார். நீதிபதி, நீங்கள் தானே சேர்ந்து வாழணும் என்று கேட்டீர்கள் என்கிறார். தங்கமயில், இனி வேண்டாம் நான் தனியாகவே வாழ்கிறேன் என்று சொல்கிறார். சரவணன் ஷாக் ஆகிறார். பின் வீட்டிற்கு வந்த தங்கமயிலிடம் அவருடைய பெற்றோர்கள் சண்டை போடுகிறார்கள். தங்கமயில், நானே சம்பாதித்து என் குழந்தையை பார்த்துக்க தெரியும் என்று சொல்கிறார்






