விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சரவணன், பழனி-சுகன்யா இருவரையும் உதவிக்கு அழைத்து வந்தார். எல்லோருமே பதறிப் போய் கோமதியை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு போனார்கள். அதற்குப்பின் கடைக்கு வந்த சரவணன், பாண்டியனிடம் நடந்ததை எல்லாம் சொன்னார். பாண்டியனுமே பதறி அடித்துக் கொண்டு ஹாஸ்பிடல் போனார். அங்கு கோமதி சீரியசான நிலையில் இருப்பதாக சொன்னார்கள். மீனா- கதிர் எல்லோருமே பாண்டியனுக்கு ஆறுதல் சொன்னார்கள். பாண்டியன் தான் செய்த தவறை நினைத்து வருத்தப்பட்டார்.

கோமதி, ஹாஸ்பிடலில் கவலைக்கிடத்தில் இருந்தார். பாண்டியன் ரொம்ப எமோஷனலாக இருந்தார். ஹாஸ்பிடலில் கோமதிக்கு சிகிச்சை கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இருந்தாலும் கோமதியின் நிலைமையில் முன்னேற்றம் இல்லை. கதிர், மீனா, சரவணன் எல்லோரும் கோமதி நினைத்து கவலைப்பட்டார்கள். இன்னொரு பக்கம் காந்திமதி, அரசி எல்லோருமே அழுது கொண்டிருந்தார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அதற்குப்பின் பாண்டியன், கோமதியை பார்த்து பேசி இருந்தார். ஆனால், கோமதி சுயநினைவுக்கு வரவே இல்லை. இதனால் பாண்டியன் அழுதார். அதற்குப்பின் பாண்டியனை, சரவணன் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார். பாண்டியனிடம் வீட்டில் உள்ள எல்லோருமே விசாரித்தார்கள். ஆனால், அவரால் எந்த பதிலும் பேச முடியவில்லை. அதற்கு பின்பு ரூமுக்கு சென்ற பாண்டியன், கோமதி உடனான நினைவுகளை நினைத்து பார்த்து அழுது கொண்டிருந்தார். சரவணன் தன் அப்பாவிற்கு ஆறுதல் சொல்லி சமாதானம் செய்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன், கோமதியை நினைத்து எமோஷனலாக அழுது கொண்டிருக்கிறார். பின் பாண்டியன், சாமியின் முன்பு நின்று கோமதி குணமடைந்து வர வேண்டும் என்று மனமுருகி வேண்டுகிறார். இதையெல்லாம் பார்த்து பாண்டியன் மகன்கள் ஆச்சரியப்படுகிறார்கள். பின் பாண்டியன் ஹாஸ்பிடலுக்கு செல்கிறேன் என்கிறார். அந்த சமயம் பார்த்து ஹாஸ்பிடலில் இருந்து
போன் வருகிறது.

சீரியல் ட்ராக்:
அப்போது கோமதி கண் விழித்து விட்டதாக சொல்கிறார்கள். உடனே பாண்டியன், கோமதியை பார்க்க ஹாஸ்பிடலுக்கு போகிறார். அங்கு கோமதியை பார்த்து தான் எமோஷனலாக வருத்தப்பட்டு பாண்டியன் பேசுகிறார். கோமதி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். அதற்கு பின் கோமதியை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து வருகிறார்கள். வீட்டில் உள்ள எல்லோருமே கோமதியின் உடல்நலத்தில் அக்கரையாக நடந்து கொள்கிறார்கள்.பாண்டியனும் கோமதிக்காக பார்த்து பார்த்து செய்கிறார்.






