விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் செந்தில் அதெல்லாம் அவள் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டாள் என்று சமாதனம் செய்தார். அப்போது கதிர், உனக்கு ஏதாவது பிரச்சனை என்றால் சொல்லு அண்ணா நான் உனக்காக துணையாக இருப்பேன். எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள் என்று சரவணனுக்கு ஆறுதல் சொன்னார். இன்னொரு பக்கம் பழனி, சுகன்யா கர்ப்பமாக இருப்பதால் தன்னுடைய குழந்தை இடம் ரொம்ப ஜாலியாகவும் நாட்டு நடப்பை பற்றி எல்லாம் பேசி கொண்டிருந்தார். இதை பார்த்து காந்திமதி, முத்துவேல் இருவரும் சந்தோஷப்பட்டார்கள்.

கோவிலில் சரவணன்- அஞ்சலி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். சரவணன் பேசினாலும் அஞ்சலி பெரிதாக கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்தார். அப்போது அந்த பக்கம் வந்த பாக்கியம், சரவணன்-அஞ்சலி இருவரும் பேசுவதை பார்த்து கொந்தளித்தா. பின் பாக்கியம், இவளுக்காக தான் என் மகளை வேண்டாம் என்று ஒதுக்கி வைத்தீர்களா? அவள் கர்ப்பமாக இருக்கிறார் என்று தெரிந்தும் என் மகளை ஏற்றுக்கொள்ள உங்களுக்கு மனது இல்லை. உனக்கு வெட்கமாக இல்லையா? உனக்கு ஊரில் வேறு ஆண்பளை கிடைக்கவில்லையா? என்று அஞ்சலியும் சரவணனையும் ரொம்ப மோசமாக பேசினார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அவமானம் தாங்க முடியாமல் அஞ்சலி அங்கு இருந்து சென்று வந்தார். இன்னொரு பக்கம் செந்தில் காலையில் எழுந்து மீனாவிற்கு உதவி செய்வதாக சொல்லிவிட்டு தூங்கி கொண்டு இருந்தார். மீனா வேலைக்கு நேரமாகிறது என்று சமைத்துவிட்டு கிளம்பி விட்டார். பின் செந்தில் வேலைக்கு நேரம் ஆகிவிட்டது என்று பதறி அடித்துக் கொண்டு ரெடியானார். அதற்குப்பின் பாண்டியன்- அரசி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது வந்து கார்த்திகேயன் தன்னுடைய பொருள்களை எல்லாம் கடையில் வைக்க பார்த்தார். பாண்டியன், உனக்கு பொருள் வியாபாரமாக வேண்டும் என்றால் நீயே தனியாக கடைப்பிடி.

சீரியல் ட்ராக்:
எதற்கு என் கடையில் வைக்கிறார் என்றெல்லாம் சொல்லி கார்த்திகேயனை அங்கிருந்து அனுப்பி விட்டார். பின் அரசி தனியாக நடந்து வந்திருப்பதை பார்த்து கார்த்திகேயன் உங்களுக்கு எந்த பொருள் வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள். நான் வீட்டுக்கு கொண்டு வந்து தருகிறேன். அந்த கடையில் வாங்க வேண்டாம் என்றெல்லாம் சொன்னார். அரசி, தன்னுடைய கடை தான் என்று சொல்லாமல் அமைதியாக இருந்தார். பின் எப்படியோ ஏதேதோ சொல்லி அரசி போன் நம்பரையும் கார்த்திகேயன் வாங்கிக் கொண்டார்.

சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் பாக்கியம், அஞ்சலியின் வீட்டிற்கு சென்று ரொம்ப மோசமாக அஞ்சலியை பற்றி பேசுகிறார். இதை அறிந்த சரவணன், தங்க மயிலின் வீட்டிற்கு சென்று கத்துகிறார். பின் கோபத்தில் கல்லை தூக்கி பாக்கியத்தின் மீது போட வருகிறார் சரவணன். கதிர் தடுத்து விடுகிறார். பின் தங்கமயில் தன்னுடைய அப்பா அம்மாவிடம் எந்த பிரச்சினையும் செய்ய வேண்டாம் என்று கெஞ்சுகிறார். அப்போது தங்கமயில் மயங்கி விழுகிறார். தங்கமயிலை ஹாஸ்பிடலில் சேர்த்திருக்கிறார்கள். இதை அறிந்த பாண்டியன், சரவணனை ஹாஸ்பிடலுக்கு போக சொல்கிறார். ஹாஸ்பிடல் சென்ற சரவணன் தங்கமயிலை பார்க்கிறார்






