விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயில், எந்த பிரச்சினையும் வேண்டாம். தயவு செய்து அமைதியாக இருங்கள் என்று சொன்னார். இன்னொரு பக்கம் கோவிலில் சரவணன், தங்கமயில் கர்ப்பம் விஷயத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். அஞ்சலி, ரொம்பவே வருத்தமாக என்னை விட்டு மீண்டும் பிரிந்து விடுவீர்களா என்று கேட்டார். சரவணன், அஞ்சலியின் கையை பிடித்து நான் உன்னை தான் திருமணம் செய்து கொள்வேன். யார் பேச்சையும் நான் கேட்க மாட்டேன் என்று வாக்குறுதி சொன்னார்.

கோமதி, மீனா, ராஜி எல்லோரும் தங்கமயில் வீட்டிற்கு கிளம்பி போனார்கள். கோமதி, என்ன பேசுவது என்று தெரியாமல் மௌனமாகவே இருந்தார். கோமதி பார்த்தவுடன் பாக்கியத்திற்கு பயங்கர கோபம் வந்தது .இருந்தாலும் அமைதியாக இருந்தார். பின் கோமதி, இவ்ளோ பெரிய உண்மையை எதற்காக மறைத்தாய்? ஏன் இப்படி செய்தாய்? நீ ஒழுங்காக எங்களிடம் எல்லா உண்மையும் சொல்லி இருந்தால் இந்த நிலைமை இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
உடனே பாக்கியம், வேண்டும் என்று கோமதியையும் அவருடைய குடும்பத்தையும் தரகுறைவாக பேசி இருந்தார். மீனா, ராஜி தடுத்தும் பாக்கியம் கேட்கவில்லை. கோமதி, பேசுவதற்கெல்லாம் பதிலுக்கு பதில் பாக்கியம் கொடுத்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் கொந்தளித்த தங்கமயில், நீ எதுவும் பேச வேண்டாம். அம்மா அமைதியாக இரு. அம்மா நீ எனக்கு செய்த வரையும் போதும் என்று சொல்லி கோமதி, மீனா, ராஜி மூவரையும் தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்றார். பாக்கியம் எவ்வளவு சொல்லியுமே தங்கமயில் கேட்கவில்லை.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தங்கமயில், நான் செய்ததெல்லாம் தவறுதான். அந்த தவறுக்கான தண்டனையாக தான் இதை பார்க்கிறேன் என்று மனம் விட்டு பேசுகிறார். கோமதி, எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்காது. நிலைமை மாறும் கவலைப்படாதே என்று ஆறுதல் சொல்லிவிட்டு செல்கிறார். இன்னொரு பக்கம் சரவணன், குழந்தையை நான் நன்றாக பார்த்துக் கொள்கிறேன். ஆனால், தங்கமயில் உடன் சேர்ந்து வாழு என்று சொல்ல வேண்டாம் என்கிறார். பாண்டியன், எதுவாக இருந்தாலும் யோசித்து தான் முடிவு எடுக்கணும். நீ எதுவும் நினைக்காதே என்று சொல்கிறார். சரவணன், என் வாழ்க்கையில் முடிவெடுக்க எனக்கு உரிமை இல்லையா? என்று தன்னுடைய அப்பாவை எதிர்த்து பேசிக் கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் கதிர், ட்ரீட்மெண்டை சீக்கிரமாகவே தொடங்கிவிடலாம் என்று சொல்கிறார். முத்துவேல், அதற்குள் நான் என் அம்மாவுடன் கொஞ்ச நாள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எப்படியாவது என்னுடைய அம்மாவை வீட்டிற்கு அனுப்பி வை என்று கேட்கிறார். கதிருமே அதற்கு வாக்குறுதி கொடுக்கிறார். பின் முத்துவேல் வீட்டிற்கு வருகிறார். அப்போது சுகன்யா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை பழனிவேல் சொல்லி சந்தோஷப்படுகிறார். எல்லோருமே வீட்டில் சந்தோஷமாக இருக்கிறார்கள். பின் இதைப்பற்றி பழனி பாண்டியன் குடும்பத்திற்கு சொல்லப் போகிறார்.






