சித்ரா இறப்பிற்கு பின்னர் சாதாரணமாக அவரது தந்தை கொடுத்த பேட்டி – ரசிகர்களின் கமன்ட்டை பாருங்க.

0
5471
chitra
- Advertisement -

பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களும் பல்வேறு பிரபலங்களும் சித்ராவின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். விஐய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. அந்த வகையில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்றுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் எத்தனை ஜோடிகள் நடித்து வந்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜோடி என்றால் கதிர்- முல்லை ஜோடிதான். இதில் கதிராக நடிகர் குமரனும், முல்லையாக நடிகை சித்ராவும் நடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இதில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து முழுமையாக பல இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சித்ரா. நடிகை சித்ரா தொகுப்பாளினி, நடிகை, நடனம், மாடலிங் என பல திறமைகளைக் கொண்டவர். நடிகை சித்ரா அவர்கள் முதன் முதலாக மக்கள் டிவியில் டிவியில் தொகுப்பாளினி ஆனார். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து வந்தார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பேரும் புகழும் ஏற்படுத்தி கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். இவருக்கென்று சமூக வலைத்தளத்தில் தனி ஆர்மி எல்லாம் கூட துவங்கிவிட்டது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நடிகை சித்ரா ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். நடிகை சித்ரா ஈ.பி.பி ஃபிலிம் சிட்டியில் நேற்றிரவு படபிடிப்பு முடித்துவிட்டு இன்று அதிகாலை (டிசம்பர் 8) 2.30 ,மணி அளவில் சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டலில் நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். நடிகை சித்ராவுடன் தங்கி இருந்த வருங்கால கணவர் ஹேமந்த் தான் சித்ரா இறந்த போது உடன் இருந்துள்ளார். இதனால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும்,சித்ராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.

தனது மகள் தனியார் ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்ததற்கான காரணத்தை கண்டுபிடித்துத் தரக்கோரி நசரத்பேட்டை காவல்நிலையத்தில் புகாரளித்திருக்கும் அவரது தந்தை செய்தியாளர்களிடம் பேசுகையில், தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரியவில்லை என்றும் அவருக்கு மன உளைச்சல் இருப்பதாக தன்னிடம் ஏதும் கூறவில்லை என்றும் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.மேலும் பேசிய அவர், சித்ரா உடலில் தூக்குமாட்டிக் கொண்டதற்கான காயம் மட்டுமே இருப்பதாகவும், வேறு காயங்கள் ஏதும் இல்லை என்றும் அவருக்கு பெற்றோர்களால் பார்த்து பதிவு திருமணம் செய்து வைத்தோம். வரும் பிப்ரவரி மாதம் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தலாம் என முடிவு செய்திருந்தோம் எனவும் கூறியுள்ளார். இந்த விடியோவை பார்த்த பலரும் இந்த வீடியோவிற்கு கீழே, வரு என்ன பக்கத்து வீட்டு பொண்ணு செத்த மாதிரி பேசுறாரு என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement