எனக்கும் குமரனுக்கு என்ன பிரச்சனை ? முதன் முறையாக விளக்கம் கொடுத்த சித்ரா.

0
72737
Mullai-kathir
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், ஹேமா விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்நிலையில் மூன்றாவது ஜோடியாக வருபவர் தான் கதிர்– முல்லை. இவர்களுடைய ரொமான்ஸ், கெமிஸ்ட்ரியும் வேற லெவல் என்றே சொல்லலாம். மேலும், இந்த சீரியல் இந்த அளவுக்கு வெற்றிக்கு காரணமானவர்களுள் இவர்களும் ஒருவர். சித்ரா– குமரன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்களிடையே அதிக வரவேற்பையும் , அன்பையும் பெற்று வருகிறார்கள்.

-விளம்பரம்-
Image result for kathir mullai

- Advertisement -

அதுமட்டுமில்லாமல் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கமிட்டாகி அடுத்த சில மாதங்களிலேயே இவங்க ரெண்டு பேரும் ஜோடி நிகழ்ச்சியில் இணைந்து நடனம் ஆடினார்கள். அந்த நிகழ்ச்சியில் ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ என்ற பாட்டுக்கு இவர்கள் ஆடிய நடனம் அட்ராசிட்டி ஆக இருந்தது. அந்த அளவிற்குப் சூப்பராக பட்டைய கிளப்புனாங்க. ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர்களுக்கு உள்ள என்ன நடந்துச்சுன்னு தெரியல ரெண்டு பேருமே எந்த நிகழ்ச்சியிலும் ஜோடியாக கலந்து கொள்ளவில்லை.

திலும் இவர்கள் இருவரில் இருந்து ஒருவர் சீரியலை விட்டு விலக போறாங்கள் என்று கூட இணையங்களில் வதந்தியை கிளப்பினார்கள். இப்படி சித்ரா,குமரன் இடையே நடந்த பிரச்சனையெல்லாம் வதந்தி, சீரியல் விளம்பரத்திற்காக செய்தது என்று கூறி இருந்தார்கள். உண்மையாலுமே இவர்கள் இருவரும் மோதலில் தான் உள்ளார்கள் என்பது பாண்டியன் ஸ்டோர்ஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் வெட்ட வெளிச்சமாக தெரிந்தது. இந்த நிலையில் இவர்கள் இருவருக்குள்ளும் என்ன தான் பிரச்சனை என்பதை முதல் முறையாக கூறியுள்ளார் சித்ரா.

-விளம்பரம்-
Video Source :Vikatan

இதுகுறித்து பேசியுள்ள அவர், ஆரம்பத்தில் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் தான். தற்போதும் நண்பர்களாக தான் இருக்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான குணாதிசயம் இருக்கும். நான் அனைவரிடமும் மிகவும் சாகசமாக பழகுவேன். யாரவது என்னை காயப்படுத்தினாலும் அவர்களுடன் நான் ஜாலியாக தான் பேசுவேன் இது தான் என்னுடைய கேரக்டர். ஆனால், ஒரு சில பேருக்கு அது வேற மாதிரி இருக்கும். ஒரு சிலர் கொஞ்சம் ரசர்வ்ட்டாக இருப்பார்கள். அதனால் கூட இருக்கலாம். ஆனால், பிரச்சனை வந்து சண்டை நடந்தது என்பது எல்லாம் கிடையவே கிடையாது. வெளியில் எங்களுக்குள் போல ஏதோ பெரிய பிரச்சனை இருப்பது போல கிளப்பி விடுகிறார்கள் என்று கூறியுள்ளார் சித்ரா.

Advertisement