கல்யாணத்துக்கு இன்னும் இவ்ளோ கேப் இருக்கு. அதுக்குள்ள – பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவின் லேட்டஸ்ட் பேட்டி.

0
3458
mullai
- Advertisement -

முல்லை கதாபாத்திரத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை சித்ரா. நடிகை சித்ரா அவர்கள் தொகுப்பாளினி, நடிகை, நடனம், மாடலிங் என பல திறமைகளைக் கொண்டவர். சித்ரா அவர்கள் முதன் முதலில் விஜேவாக தான் தன் பயணத்தை தொடங்கினார். பின் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக மாறினார். சித்ரா அவர்கள் முதன் முதலாக மக்கள் டிவியில் தான் தொகுப்பாளினியாக ஆனார். பின்னர் படிப்படியாக சீரியலில் நடிக்கத் தொடங்கினார். சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து வந்தார்.

-விளம்பரம்-
chitra

பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்தார். தற்போது விஜய் டிவியில் வசூல் வேட்டை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் வருகிறார். எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் நடிகை சித்ராவும் ஒருவர். இந்நிலையில் நடிகை சித்ரா அவர்கள் சமீபத்தில் வீடியோ கால் மூலம் நேர்காணல் ஒன்று கொடுத்திருந்தார். அதில் தொகுப்பாளர் கூறியது, ரசிகர்கள் உங்களிடம் கேள்வி ஒன்று கேட்டுள்ளார்கள்.

இதையும் பாருங்க : திருமணமான இத்தனை நாட்களிலேயே விவாகரத்து குறித்து யோசித்துவிட்டேன். அப்போதே கூறியுள்ள ரம்யா.

- Advertisement -

அது என்னவென்றால் நீங்கள் எப்போ கல்யாணம் பண்ணப் போறிங்க? அப்படி பண்ணினால் அது அரேஞ்ச் மேரேஜா? லவ் மேரேஜா? என்று கேட்டுள்ளார்கள். அதற்கு சித்ரா அவர்கள் கூறியிருப்பது, இன்னும் என்னன்னு எனக்கு தெரியல. என்னுடைய கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு வருடம் இருக்கு. அதுக்குள்ள ப்ரொபோஸ் பண்ணறவங்க எல்லாம் ப்ரொபோஸ் பண்ணிக்கலாம் என்று ஓப்பனாக சொல்லியிருந்தார்.

சித்ரா கூறிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சித்ரா ப்ரொபோஸ் பண்ணிக்கங்க என்று சொல்றத பார்த்த சித்ரா உடைய திருமணம் லவ் மேரேஜ் ஆக இருக்கும்மோ? என்று ரசிகர்கள் கூறி உள்ளார்கள். தற்போது சித்ரா அவர்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் நடித்து வருகிறார். ஒரு சாதாரண குடும்பக் கதையை மையமாகக் ஒரு தொடர்.

இதையும் பாருங்க : ‘என் நாட்டிற்கு தேவையான நேரம் இது’ – மீண்டும் டாக்டர் சேவைக்கு வந்த நடிகருக்கு குவியும் பாராட்டு

-விளம்பரம்-

இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதை. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும், பாராட்டும் பெற்று வருகிறது. மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம்,மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து வருகிறார்கள்.
.

Advertisement