உண்மையாகவே குடிச்சிட்டு நடிச்சிங்களா? பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா பட்ட கஷ்டம்- அவரே வெளியிட்ட வீடியோ

0
303
venkat
- Advertisement -

பொதுவாகவே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் எல்லாம் டிஆர்பியில் முன்னிலை வகித்து வருகிறது. அதிலும் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாகக் கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், காவ்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியல் ஆரம்பித்த காலத்தில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது. அதனால் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் சீரியலுக்கு உள்ளது. மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து வருகிறார்கள். தெலுங்கில் வடிநம்மா என்ற பெயரிலும், கன்னடத்தில் வரலக்‌ஷ்மி வடிநம்மா எனவும் இந்தியாவில் 8 மொழிகளிலும் இலங்கையிலும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. அதோடு இந்த சீரியலில் ஆரம்பத்தில் முல்லையாக நடித்து வந்தவர் விஜே சித்ரா.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்:

இவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அவருக்கு பதிலாக காவ்யா நடித்து வருகிறார். சித்ராவின் இழப்பு சின்னத்திரையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் வெங்கட். இவருக்கும் மீனாவுக்கும் இடையேயான சண்டைகள் எல்லாம் பயங்கர ஃபன்னாக இருக்கும். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தி குடும்பத்தினர் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் கடையை கட்டி இருக்கிறார்கள். கடந்த சில வாரங்களாகவே சீரியலில் கடையை திறப்பதற்காக மொத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் பல போராட்டங்களை சந்தித்து இருந்தது.

கடைதிறந்ததால் ஜீவா செய்த வேலை:

பின் வெற்றிகரமாக கடையை திறந்து உள்ளார்கள். அதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் சந்தோஷத்தில் உள்ளது. அது மட்டுமில்லாமல் பார்க்கும் ரசிகர்களும் சந்தோசத்தில் உள்ளார்கள். இப்படி பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. அந்த வகையில் கடையைத் திறந்த சந்தோஷத்தில் ஜீவா மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருகிறார். பின் வீட்டில் அவர் செய்யும் சேட்டைகள், கலாட்டாக்கள் எல்லோரும் மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. பலரும் அவருடைய காட்சிகளை பார்த்து வயிறு குலுங்கி சிரித்து மகிழ்ந்து உள்ளார்கள் என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

ஜீவாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்:

அதுமட்டுமில்லாமல் ஜீவாவின் இந்த எபிசோடுகளால் பாண்டியன் ஸ்டோர்ஸ் டிஆர்பி எகிறியது. அந்த அளவிற்கு வெங்கட் நடித்துள்ளார். இந்த நிலையில் இதுகுறித்து ஜீவா என்கிற வெங்கட் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவிட்டு கூறி இருப்பது, என்னுடைய காட்சிகளை பார்த்து மக்கள் சிரித்து மகிழ்ந்தார்கள் என்று பலரும் கமெண்ட் போட்டு இருந்தார்கள். பலரும் வாழ்த்து சொல்லி இருந்தார்கள். எனக்கு ரொம்ப சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. அதே சமயம் சிலர் நிஜமாகவே மது அருந்திவிட்டு நடித்தீர்களா? என்று கேட்டார்கள்.

மது அருந்திய காட்சியில் ஜீவா பட்ட கஷ்டம்:

அவர்களுக்காக தான் நான் இந்த காட்சி நடிக்க என்னென்ன செய்தேன் என்ற ஒரு குட்டி வீடியோவை பகிர்ந்து உள்ளேன் என்று கூறி இருக்கிறார். அந்த வீடியோவில், நடிகர் வெங்கட் மது அருந்தும் காட்சியில் நடிப்பதற்கு பட்ட கஷ்டங்களை காண்பித்து உள்ளார்கள். அதில் ஜீவா மது அருந்தியவர் போல நடிப்பதற்கு தன்னுடைய கண்களில் கையை வைத்து தேய்த்து பயங்கர கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார் என்பது தெரிய வருகிறது. இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் எல்லோரும் ஜீவா என்கிற வெங்கட்டுக்கு வாழ்த்துக்களையும், லைக்ஸ்குகளையும் குவித்து வருகிறார்கள்.

Advertisement