சத்யராஜின் இந்த படத்தின் காப்பி தான் வலிமை – பிரபல நடிகர் விமர்சனம் (அட, அப்படி தான் இருக்கு)

0
439
valimai
- Advertisement -

நீண்ட நாள்கள் எதிர்பார்த்து இருந்த வலிமை படம் ரிலீசாகி இருக்கிறது. நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார். இதையும் போனிகபூரே தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து உள்ளார் மற்றும் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், படத்தில் அஜித் அவர்கள் அசிஸ்டன்ட் கமிஷனராக நடித்திருக்கிறார். சென்னையில் Satan Slave குழுவை சேர்ந்த இளைஞர்கள் பைக்கை வைத்து பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகின்றார்கள்.

-விளம்பரம்-
Ajith Shared Screen Space With Sathyraj In Pagaivan Movie

இதை அஜித் கண்டுபிடித்து அந்த கூட்டத்தின் தலைவரை பிடிக்கிறார். இந்த குழுவில் அஜித்தின் தம்பியும் இருப்பது தெரிகிறது. இதையெல்லாம் அஜித் எப்படி சமாளித்து வருகிறார்? என்பது தான் படத்தின் கதை. படம் முழுவதும் அஜித்தின் ஒவ்வொரு காட்சிகளும் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது. அதோடு வில்லன் கதாபாத்திரத்தில் கார்த்திகேயா மிரட்டியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஆண்களுக்கு இணையாக ஆக்சன் காட்சிகளில் ஹூமா குரேஷி மாஸ் காட்டியிருக்கிறார்.

- Advertisement -

வலிமை படம் பற்றிய தகவல்:

அதிலும் படத்தில் பஸ் பைட் தமிழ் சினிமாவிலேயே ஒரு மைல்கல் காட்சி என்று சொல்லுமளவிற்கு இயக்குனர் மிரட்டி இருக்கிறார். மேலும், வலிமை படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இருந்தாலும் சிலர் எதிர்மறையான கருத்துக்களை பதிவிட்டு தான் வருகிறார்கள். வலிமை படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக சென்றாலும் இரண்டாம் பாதி ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றம் என்று சிலர் கூறுகிறார்கள்.

வலிமை படம் அட்டக்காப்பி:

இந்த நிலையில் பயில்வான் ரங்கநாதன் வால்டர் வெற்றிவேல் படத்தின் காப்பி தான் வலிமை படம் என்று கூறியுள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பி வாசு இயக்கத்தில் சத்யராஜ், சுகன்யா நடிப்பில் வெளியான திரைப்படம் வால்டர் வெற்றிவேல். இந்த படத்தில் சத்யராஜ் போலீஸ் அதிகாரி நடித்திருப்பார். அதே போல் வலிமை படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். வால்டர் வெற்றிவேல் படத்தில் சத்யராஜ் தம்பி அப்பாவி போல் நடித்து வில்லனாக இருப்பார். அதேபோல் வலிமை படமும் உள்ளது.

-விளம்பரம்-

வலிமை படத்தை விமர்சித்த பயில்வான் ரங்கநாதன்:

இந்த இரண்டு படங்களிலும் சண்டை காட்சிகள் மட்டும்தான் வேறுவிதமாக உள்ளது. வலிமை படத்தில் அதிக ஸ்டன்ட் காட்சிகள் இருக்கிறது. இதனால் வால்டர் வெற்றிவேல் படத்தை இப்போ உள்ள ட்ரெண்டை போல் எடுத்துள்ளார் வினோத் என்று பயில்வான் ரங்கநாதன் வலிமை படத்தை விமர்சித்து குற்றம் சாட்டியிருக்கிறார். இப்படி வலிமை படத்தை விமர்சித்து இருக்கும் பயில்வான் ரங்கநாதன் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி உள்ளது. இதனால் அஜீத் ரசிகர்கள் எல்லோரும் கொந்தளித்துப் போய் பயில்வான் ரங்கநாதனை வறுத்து எடுத்து வருகிறார்கள்.

பயில்வான் ரங்கநாதன் பற்றிய தகவல்:

தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் உடன் இணைந்து படத்தில் நடித்து நடிகர்கள். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தவுடன் தனியாக யூட்யூப் சேனல் உருவாக்கி அதில் சினிமா பிரபலங்கள் மற்றும் அவர்களின் படங்களை பற்றி அவதூறாக பேசி வருகிறார். அதோடு இவர் சினிமா துறையில் உள்ள நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் அவர்களைப் பற்றி அவதூறாக பேசி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

Advertisement