கடை பேனரில் கதிர் முல்லை புகைப்படம். அதுவும் எந்த கடைனு பாருங்க. வெறித்தனமான ரசிகரா இருப்பாரோ.

0
73232
kathir-mullai

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற மளிகை கடை ஒன்றை நடத்தி வருபவர் அண்ணன், தம்பி நால்வர். இந்த குடும்பத்தின் மூத்த மருமகள் தனலட்சுமி. இவர் அன்பால் தன் குடும்பத்தில் உள்ள அனைவரையும் அரவணைப்பார். மேலும், அவர் தன் கணவரின் தம்பிகளை தன் பிள்ளைகள் போல பார்த்துக் கொள்வார். இந்த குடும்பத்தின் மற்ற மருமகள் தான் மீனா மற்றும் முல்லை. இந்நிலையில் மூன்றாவது ஜோடியாக வருபவர் தான் கதிர்– முல்லை. இவர்களுடைய ரொமான்ஸ், கெமிஸ்ட்ரியும் வேற லெவல் என்றே சொல்லலாம்.

மேலும், இந்த சீரியல் இந்த அளவுக்கு வெற்றிக்கு காரணமானவர்களுள் இவர்களும் ஒருவர். நடிகை சித்ரா அவர்கள் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர். பின்னர் படிப்படியாக சீரியலில் நடிக்கத் தொடங்கினார். முதலில் இவர் விஜே வாக தான் அறிமுகமானார். நடிகை சித்ரா அவர்கள் தொகுப்பாளினி, நடிகை, நடனம், மாடலிங் என பல திறமைகளைக் கொண்டவர். நடிகை சித்ரா அவர்கள் முதன்முதலாக மக்கள் டிவியில் டிவியில் தொகுப்பாளினியாக இருந்தார். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து வந்தார். பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்தார். தற்போது விஜய் டிவியில் வசூல் வேட்டை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இதையும் பாருங்க :கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறி நயனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்கி. அரை மணி நேரத்தில் 50 ஆயிரம் லைக்ஸ்.

- Advertisement -

அதோடு சினிமா படங்களிலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்து உள்ளது. மேலும், சித்ரா, குமரன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்களிடையே அதிக வரவேற்பையும் , அன்பையும் பெற்று உள்ளார். ”முல்லை சித்ரா” என்ற குரூப் ஒன்றை ஓபன் செய்து ரசிகர்கள் சித்ரா குறித்த தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கமிட்டாகி அடுத்த சில மாதங்களிலேயே இவங்க ரெண்டு பேரும் ஜோடி நிகழ்ச்சியில் இணைந்து நடனம் ஆடினார்கள். அந்த நிகழ்ச்சியில் ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ என்ற பாட்டுக்கு இவர்கள் ஆடிய நடனம் அட்ராசிட்டி ஆக இருந்தது. அந்த அளவிற்குப் சூப்பராக பட்டைய கிளப்புனாங்க. ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர்களுக்கு உள்ள என்ன நடந்துச்சுன்னு தெரியல ரெண்டு பேருமே எந்த நிகழ்ச்சியிலும் ஜோடியாக கலந்து கொள்ளவில்லை. அதிலும் இவர்கள் இருவரில் இருந்து ஒருவர் சீரியலை விட்டு விலக போறாங்கள் என்று கூட இணையங்களில் வதந்தியை கிளப்பினார்கள்.

Image result for kumaran chithra

-விளம்பரம்-

சமீப காலமாக தான் இந்த பிரச்சனை முடிஞ்சு சீரியல் சூப்பராக போய் கொண்டு உள்ளது. இந்நிலையில் நடிகை சித்ரா அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை போட்டு உள்ளார். அது என்னவென்றால், மங்கலத்தில் மயிலாடுதுறையில் ஒருவர் “அண்ணாச்சி டீ, காபி சென்டர் மற்றும் ஜூஸ் சென்டர்” என்று ஒரு கடையை ஆரம்பித்து உள்ளார். அதில் முல்லை –கதிரின் புகைப்படத்தை போட்டு அந்த கடையை தொடங்கி உள்ளார். இதை பார்த்ததும் நமக்கும் இப்படி ஒரு ரசிகர்களால என்று ஆச்சரியத்தில் அந்தக் கடையின் பேனரை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் ட்விட்டர் பக்கத்தில் போட்டு உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் லைக் செய்து வருகின்றனர்.

Advertisement