குழந்தை வந்தாச்சு. ரசிகர்களுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா சொன்ன ஹேப்பி நியூஸ். என்ன பெயர் தெரியுமா ?

0
10512
hema
- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மீனா என்கிற ஹேமா. இவருடைய சொந்த ஊர் மயிலாடுதுறை. இவருக்கு சிறு வயதிலிருந்தே மீடியாவில் அதிக ஆர்வம் உடையவர். ஹேமா எம்சிஏ படித்து முடித்த பிறகு சைதாப்பேட்டை போலீஸ் காவல் துறை அலுவலகத்தில் ஹார்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து இருக்கிறார். அதற்கு பின்னர் இவர் வசந்த் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானார்.

-விளம்பரம்-

பின்னர் இவர் பல சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தும் இருந்தார். பிறகு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியலில் நடித்தார். இதை தொடர்ந்து இவர் குலதெய்வம், மெல்ல திறந்தது கதவு, சின்ன தம்பி என பல சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் வெள்ளித்திரையில் பாயும் புலி, அட்டகத்தி, இவன் யார் என்று தெரிகிறதா, போன்ற பல படங்களில் நடித்து உள்ளார்.

தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவர் முதல் தம்பிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.மேலும், இந்த சீரியலில் இவர் கர்ப்பமாக இருக்கிறார். இது அனைவருக்கும் தெரிந்ததே. சமீபத்தில் கூட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வளைகாப்பு எபிசோட் கோலாகலமாக நிறைவடைந்தது.

-விளம்பரம்-

அதே தற்போது இவர் உண்மையாகவே கர்ப்பமாகவும் இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ்ஸில் மீனா பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், ‘பாண்டியம்மா வந்தாச்சு’ என்று தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். எனவே சீரியல் கதைப்படி அவருக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக தெரிய வருகிறது.

Advertisement