‘விஜய் சார்கிட்ட சொல்லவே போய்ட்டேன்’ – வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட அவமானம் குறித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்.

0
646
varisu
- Advertisement -

வாரிசு செட்டில் என்னை அவமானப்படுத்தி அனுப்பி விட்டார்கள் என்று நடிகர் ரவிச்சந்திரன் அளித்திருந்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனாவின் தந்தையாக ஜனார்தன் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் ரவிச்சந்திரன். இவர் இந்த சீரியலுக்கு முன்பே பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தற்போது இவர் நம்ம வீட்டு மீனாட்சி என்ற தொடரிலும் நடித்து வருகிறார். இவர் நிறைய படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

நடிகர் ரவிச்சந்திரன் கும்பகோணத்தை சேர்ந்தவர். இவர் ஆரம்பத்தில் மசாலா கம்பெனி ஒன்றை நடத்தி வந்து இருந்தார். ஆனால், அந்த தொழிலில் பெரிய நஷ்டம் ஏற்பட்டு அதனால் தன்னுடைய சொந்த ஊரை விட்டு கிளம்பி வேலை தேடி சென்னை வந்தார் ரவிச்சந்திரன். பின் நண்பர்கள் மூலம் தான் இவர் பல விளம்பர படங்களில் நடித்து இருந்தார். அப்படியே அவருக்கு டிவி, சினிமா என்று வாய்ப்புகள் வந்தது. இந்நிலையில் சமீபத்தில் இவரை சந்தித்து பிரபல சேனல் பேட்டி ஒன்றை எடுத்திருந்தது.

- Advertisement -

நடிகர் ரவிச்சந்திரன் அளித்த பேட்டி:

அதில் அவர் வாரிசு படப்பிடிப்பில் நடந்த அவமானம் குறித்து கூறியிருப்பது, எனக்கு வாரிசு பட சூட்டிங்கிற்கு வரச்சொல்லி போன் வந்தது. நானும் ஆர்வமாக போய் இயக்குனர் முன்னாடி நின்னேன். சில நிமிடங்கள் அவர் என்னை மேலும், கீழும் பார்த்துவிட்டு உதவி இயக்குனர் காதில் ஏதோ சொல்லிவிட்டு சென்றுவிட்டார். பின் உதவி இயக்குனர் என்னிடம் வந்து கேரவனில் போய் உட்காருங்க சார் என்று சொன்னார். நானும் போய் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி இருந்தேன். பிறகு வந்த உதவி இயக்குனர், உங்களை சார் கிளம்ப சொல்லிவிட்டார். உங்க லுக் ரொம்ப ரிச்சாக இருக்கு என்றார்.

வாரிசு ஷூட்டிங்கில் நடந்தது:

உடனே நான், மேக்கப்பில் சரி செய்யலாமே என்று சொன்னேன். ஆனால், அதை அவர் காதில் வாங்கவில்லை. பத்து நிமிடம் பேசாமல் உட்கார்ந்து விட்டேன். ஆரம்பத்தில் தொழிலில் லட்சக்கணக்கில் நஷ்டமடைந்து வராத மன வேதனை அன்று எனக்கு வந்தது. நடிக்க வைத்து உனக்கு நடிப்பு வரவில்லை என்று சொல்லி அனுப்பி இருந்தார்கள் என்றால் கூட எனக்கு இவ்வளவு கஷ்டம் இருந்திருக்காது. மேலேயும், கீழேயும் பார்த்துவிட்டு போ என்று சொன்னது ரொம்ப கஷ்டமாக இருந்தது. பின் மனதை திடப்படுத்திக் கொண்டு என்னை அழைத்த மேனேஜரிடம் போனேன்.

-விளம்பரம்-

விஜய் சார் குறித்து சொன்னது:

விஜய் சார் கேரவனில் தானே இருக்கார். அவர் கிட்ட போய் உங்க படத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது. ஒருத்தரை வம்படியாக கூட்டிவந்து அசிங்கப்படுத்தி விட்டார்கள் என்று சொல்லுங்க. நான் விஜய் சாரை பார்க்கணும் என்று கேட்டேன். உடனே அவர் என்னை கையெடுத்து கும்பிட்டு உங்களுக்கு பேசியபடி ஒரு நாள் சம்பளம் கொடுத்து விடுகிறேன். விஜய் சார் கிட்ட எல்லாம் கொண்டு போகாதீர்கள் என்று கேட்டார். பின் நான் மனவேதனையுடன் நொந்து போய் அங்கிருந்து வந்து விட்டேன். எனக்கு ஒரு நாள் சம்பளம் வந்தது.

varisu

மனவேதனையில் நடிகர் ரவிச்சந்திரன்:

ஆனால், இந்த விஷயத்தை விஜய் சார்கிட்ட கொண்டு போகணும் என்று தான் நினைத்தேன். அவர் கேட்டுக் கொண்டதனால் நான் விட்டுவிட்டேன். இதை ஏன் சொல்கிறேன் என்றால், முதல் நாள் என்னை பார்க்கிற இயக்குனருக்கு அந்த காஸ்ட்யூமில் நான் ரிச்சா தெரிவேனா? இல்லையா? என்பது தெரியாதா. எதுக்கு ஒரு நடிகரை கூப்பிட்டு அவமானப்படுத்த வேண்டும் என்று மனவேதனையுடன் நடிகர் ரவிச்சந்திரன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement