தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்பவர் சிம்பு. இவர் இயக்குனர், நடிகர் டி ராஜேந்திரன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்பு குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டு இருக்கிறார். சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த ஈஸ்வரன் படம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை என்றாலும் சிம்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து சிம்பு அவர்கள் மாநாடு என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். பல பிரச்சனைகளுக்கு பிறகு தான் மாநாடு படம் வெளியாகி இருந்தது.
மேலும், இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் மாநாடு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து சிம்பு அவர்கள் தற்போது வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கௌதம் மேனன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் பணிகள் மும்முரமாக நடந்து கொண்டு இருக்கிறது. தற்போது சிம்பு அவர்கள் BB அல்டிமேட் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக உள்ளார்.
சர்ச்சை மன்னன் சிம்பு:
இருந்தாலும் சிம்பு என்றாலே சர்ச்சை மன்னன் என்று சினிமா துறையில் சொல்லும் அளவிற்கு பல பிரச்சினைகள் கிளம்பி இருக்கிறது. தற்போது தான் சிம்பு தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறார். ஆனால், அவர் அமைதியாக இருந்தாலும் இந்த சர்ச்சைகள் அவரை விடாமல் துரத்துகின்றன. ஏதாவது ஒரு பிரச்சினையில் எப்படியாவது சிம்புவின் பெயர் வந்துவிடுகிறது. அதோடு இவருடைய திருமணம் குறித்து ஏதாவது ஒரு வதந்தி சோசியல் மீடியாவை வைரலாகி கொண்டு தான் வருகிறது.
சிம்பு திருமணம் குறித்து ஜெய் சொன்னது:
தமிழ் சினிமாவில் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நடிகர்களின் பட்டியலில் சிம்புவின் பெயர் முதலிடத்தில் இருக்கும் என்று சொல்லலாம். தினமும் சிம்புவின் திருமணத்தை பற்றி ஏதாவது ஒரு தகவல் வந்து கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் கூட நடிகர் ஜெய் அவர்கள் சிம்பு அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்வார் என்று அறிவித்து இருந்தார். இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகையின் தங்கை சிம்புவை பல வருடமாக காதலிப்பதாகக் கூறி இருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிம்புவை காதலிக்கும் சீரியல் நடிகை:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் ஒன்று. இந்த தொடர் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இப்போது வரை பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கின்றது. இந்த தொடரில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சாய் காயத்ரி. இவருடைய தங்கை தான் மதுரா. இவரும் சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக திகழ்கிறார். இந்நிலையில் இவர் சிம்புவை காதலிப்பது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, பள்ளி படிக்கும் காலத்திலேயே காலையில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கும்போது சிம்புவின் பாடல் ஒன்றை கண்டேன்.
சிம்புவிற்கு ப்ரொபோஸ் செய்யும் மதுரா வீடியோ:
அப்போது பார்த்ததிலிருந்து சிம்பு மேல் எனக்கு ஒரு கிரஸ். அதன்பின் அந்த படம் தம் என்றும் அவர் பெயர் சிம்பு என்றும் கண்டுபிடித்தேன். அப்போதிலிருந்து 16 வருடமாக நான் சிம்புவை ஒருதலையாக காதலித்து வருகிறேன். சிம்புவை நேரில் பார்த்தால் உடனடியாக ப்ரொபோஸ் செய்துவிடுவேன் என்று கூறி சிம்புவை ப்ரொபோஸ் செய்யும் மதுரா வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை ரசிகர்கள் பயங்கரமாக ட்ரெண்டிங் ஆகி வருகிறார்கள். சிலர் இந்த வீடியோவிற்கு நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் கமெண்ட்டுகளை போட்டு வருகிறார்கள். ஆக மொத்தத்தில் சிம்புவிற்கு திருமணமானால் போதும் என்று சிலர் கூறி வருகிறார்கள்.