பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் வெங்கட் ரங்கநாதன் புதிதாக தொடங்கி இருக்கும் பிசினஸ் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் வெங்கட் ரங்கநாதன். இவர் தொகுப்பாளராக தான் சின்னத்திரையில் அறிமுகமானர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ என்ற சீரியல் மூலம் தான் நடிகர் ஆனார். அதனை தொடர்ந்து இவர் புகுந்த வீடு, ஆண்பாவம், மாயா, தெய்வம் தந்த வீடு, அக்னி பறவை, மெல்ல திறந்தது கதவு, நினைக்க தெரிந்த மனமே போன்ற பல சீரியல்களில் நடித்து இருந்தார்.

இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த ரோஜா சீரியல் தான். இது தவிர இவர் நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருந்தார். மேலும், இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கடந்த ஆண்டு முடிவடைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில் ஜீவா என்ற ரோலில் நடித்து இருந்தார். இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இந்த சீரியலில் மீனா- ஜீவா உடைய காம்பினேஷன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2- தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் குமார்,அரசி திருமணம் முடிந்ததாக பொய் சொல்லி இருந்தார்கள். இதனால் பாண்டியன் குடும்பம் உடைந்து விட்டது. இன்னொரு பக்கம் செந்தில் அரசாங்க வேலைக்காக பாண்டியனுக்கு தெரியாமல் பணம் கொடுத்து இருக்கிறார். அடுத்து என்ன? என்ற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது.

வெங்கட் குறித்த தகவல் :
மேலும், இந்த தொடர் ஆரம்பித்த நாளில் இருந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.
சமீபத்தில் தான் இந்த சீரியலில் செந்தில் கதாபாத்திரத்தில் நடித்து இருந்த வசந்த் விலகி வெங்கட் நடித்து வருகிறார். மீண்டும் செந்தில்- மீனா நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது. இதனிடையே இவர் அஜந்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு அழகான ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவர் தன் மகளுடன் இணைந்து விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து இருந்தார்.

வெங்கட் புது பிசினஸ்:
மேலும், சில வாரங்களுக்கு முன் வெங்கட் – அஜந்தா ஜோடிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் வெங்கட் ரங்கநாதன் புதிய பிசினஸ் துவங்கியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, சென்னையில் டெசர்ட் கடை ஒன்றை தான் வெங்கட் திறந்து இருக்கிறார். இது முழுக்க முழுக்க இனிப்பு வகைகள் கொண்ட கடை.
View this post on InstagramA post shared by Venkatesh Renganathan (@venkat_renganathan)
வெங்கட் பதிவு:
இது தொடர்பாக நடிகர் வெங்கட் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றையும் பதிவிட்டிருக்கிறார். அதில் அவர், ஹலோ மக்களே போரூர் மெட்ராஸ் ஃபுட்வாக் ல தெரபி டெசர்கர்ட்னு 'டெசர்ட்ஸ்' கடையை உங்கள் நண்பன் நான் வெங்கட் திறந்திருக்கிறேன். இதில் தரமான பாஸ்ட்ரீஸ் , மில்க் ஷேக் கிடைக்கும். எனக்கு உங்களுடைய ஆதரவை கொடுங்கள் என்று கூறியிருக்கிறார். தற்போது இவருடைய வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.






